Author: Six Side Media
-
குழந்தையின் டயப்பரில் தங்கத்தை கடத்திய தந்தை
இந்தியாவின் கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர். கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான…
-
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது. 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர…
-
ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது
ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த ‘ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில் நள்ளிரவில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அவர் திடீரென தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு மற்றும் எண்ணெய் டப்பாவை…
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி: இந்திய – இலங்கை இடையே விசேட கலந்துரையாடல்
இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் இன்று (03) முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மைத்திரி குல்கர்னி உட்பட பிரதிநிதிகள் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின்…
-
Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு
இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை வலுப்படுத்தும் (SWYFT) திட்டத்தின்கீழ், முற்றிலும்…
-
இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை
இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வௌியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள…
-
இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்
இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார். அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதுடன், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். அனிமேஷன் துறையில் அவரது முன்னோடிப் பணி இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான…
-
நேபாளத்தில் சடலங்கள் கிடைக்காததால் வினோதமான முடிவெடுத்த உறவினர்கள்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 1,114 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,462 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்ட…
-
ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்க இடையே 6 மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் குசிஸ்தான், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான், ஹோர்மொஸ்கான் மற்றும் கெர்மான் ஆகிய மாகாணங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஈரானின் ஹோர்மொஸ்கான் மாகாணத்தின் சிரிக்கு மாவட்டத்தில் உள்ள கூஹெஸ்டாக்…
-
ஃபுளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில் ஜூரி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது:
22 வயதான அலானா சிம்ஸ் (Alana Sims) மற்றும் அவரது கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராப்பர் பில்லி ஆடம்ஸ் III (Billy Adams III – Ace NH) என்பவருக்கு, கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக 8-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஜூரி பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், தாயான அலானா சிம்ஸின் கொலைக்கு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாக்களித்துள்ளது. ஜூரியின் இந்தத்…