Author: Six Side Media
-
சீனாவில் மண்சரிவு; ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் மாயம்
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
சீன பிரஜை படுகொலை : மேலும் ஒருவர் கைது
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 04) கொழும்பு துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 54 வயதுடைய சீனப்…
-
மாறாயிலுப்பை, புதுக்குளம் வயல்காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மாறாயிலுப்பை கமக்கார அமைப்புப் பிரிவிலுள்ள புதுக்குளத்தின் கீழ் 14 விவசாயிகளுக்குச் சொந்தமான 52 ஏக்கர் பூர்வீக வயல்காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்த நிலையில், தற்போது அவற்றை காண்பிக்குமாறு கோருவது நியாயமற்றது…
-
கச்சா எண்ணெய் திருட முயற்சி.. 37 பேர் உயிரிழந்த பயங்கரம்
நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு எண்ணெய் குழாயில், 200-க்கு மேற்பட்டோர் படகுகளில் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்தத்தில் கச்சா எண்ணெய் வெளியேறியபோது, அதிலிருந்து பரவிய நச்சுப் புகையை அங்கிருந்தவர்கள் சுவாசித்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுடன், சிலர் ஆற்றில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 37 உயிரிழந்திருப்பதாக…
-
2027-ல் 50 ஆண்டில் இல்லாத பேராபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை.!
பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அளவு அதிகரிக்கும் நிகழ்வே ‘எல் நினோ’ என அழைக்கப்படுகிறது. அப்படி எல் நினோ உருவானால் அது உலகம் முழுவதிலும் பெரும் வானிலை மாற்றங்களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தும். இந்த ஆண்டு ‘எல் நினோ’ உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், கணிப்புக்கு மாறாக பசிபிக் பெருங்கடலில் வெப்பம் கடுமையாக அதிகரித்ததால் ‘சூப்பர் எல் நினோ’ (Supersized El Niño) உருவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு…
-
சூப்பர் எல் நினோ காரணமாக பசிபிக் கடலில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் உருவாக உள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பம் அடைவதை தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். எல் நினோ உருவாகி இருப்பதால், உலக அளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கடுமையான மழைப்பொழிவையும், எல்.நினோ ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள எல்.நினோ சூப்பர் எல்.நினோவாக மாறியதால், கடலின்…
-
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 5, 2026 சனி
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி நவமி இரவு 9.21 வரை பிறகு தசமி நட்சத்திரம் மிருகசீரிடம் இரவு 9.44 வரை பிறகு திருவாதிரை யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை நல்லநேரம் காலை 8 முதல் 9 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் விசாகம் இரவு 9.44 வரை பிறகு அனுஷம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷராசி…
-
தமிழக முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அஜித்-விஜய் ஆகிய இருவரை நிச்சயமாக சொல்ல முடியும். இவா்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லப்படுகிறது. தற்போது, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியுள்ள விஜய், அரசியலில் நுழைந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இப்படியான சூழலில், முதலமைச்சர் விஜயின் புதிய நடவடிக்கை ஒன்றை, நடிகர் அஜித்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில்…
-
நாமல் எம்.பி. கைது – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் சென்று…
-
12ஆம் திகதி என்ன நடக்கப் போகிறது?
“என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் நேற்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி…