Author: Six Side Media

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 14, 2026 திங்கள்

    பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி திரிதியை காலை 8.40 வரை பிறகு சதுர்த்தி நட்சத்திரம் சித்திரை மாலை 4.12 வரை பிறகு சுவாதி யோகம் சித்தயோகம் மாலை 4.12 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் பூரட்டாதி மாலை 4.12 வரை பிறகு உத்திரட்டாதி…

  • புயல் காற்றில் சிக்கி கடுமையாக குலுங்கிய விமானம்

    கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் விமானம் துனிசியாவின் கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்றபோது அங்கு வீசிய புயல் காற்றில் சிக்கியது. இதனால் 3 முறை முயன்றபோதும் விமானதால் தரையிறங்க முடியவில்லை. மேலும் விமானமானது கடுமையாக குலுங்கியுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பீதியில் கூச்சலிட்ட காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பயணிகளில் ஒருவரான மரினா மேஸ்காயா தெரிவிக்கையில், மூன்றாவது முயற்சியின் போது விமானம்…

  • 601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…

  • 22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

    கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) – கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார். மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர். இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல்…

  • ‘கில்லி’ கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

    சென்னை நகரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் சைகை காட்டுவது போன்ற வடிவிலும், ‘கில்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி வீரர் தோற்றத்திலும் சில விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேவேளை, திருவல்லிக்கேணி பகுதியில்…

  • புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!

    கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றி, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் Mrs. Sri Lanka கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்தத்…

  • அமெரிக்க தளத்தை உளவு பார்த்த சீனா? – ட்ரம்ப் பரபரப்பு பதில்

    ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலை 17ஆம் திகதி ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த நிலையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, குறித்த அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான செயற்கைக்கோள்…

  • ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் – ஆந்த்ரோபிக் சி.இ.ஓ.

    செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தி, அதன் அபாயங்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உலகளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில், “தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்ற தலைப்பில் டாரியோ அமோடி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கைத்…

  • செயற்கை நுண்ணறிவு போட்டியில் வெல்பவர்களே உலகை வெல்வார்கள் – ட்ரம்ப்

    செயற்கை நுண்ணறிவு (AI) போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே உலகளவில் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு ஓபன் ஏஐ, எக்ஸ் ஏஐ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், இதற்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அயர்லாந்து…

  • மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் – எண்ணெய் விநியோகத்துக்கு புதிய அச்சுறுத்தல்

    மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் இடம்பெறும் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (14) நடைபெறவிருந்த நிலையில், ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கில் அது ஒத்திவைக்கப்பட்டதாக ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் பத்ர் அல்-புசைதி தெரிவித்துள்ளார். ஓமான் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பில் வளைகுடா அரபு நாடுகளுடன் ஈரானும்…