Author: Six Side Media

  • புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார். இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது. “WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது. “பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார். ”…

  • மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

    மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

    மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை…

  • பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும்…

  • தென்கொரியாவில் கனமழையினால்  17பேர் பலி

    தென்கொரியாவில் கனமழையினால் 17பேர் பலி

    தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர்…

  • ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் மகனும் இவர் ஆவார். 9.3.1998ஆம் திகதி பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.  கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி…

  • திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!

    திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!

    திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.…

  • ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

  • யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு

    யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு

    யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் இன்று (14.07.2025) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

    அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

    கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், இன்று (14) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 297.13 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 9.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

  • பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகமான சரோஜா தேவி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். தொடர்ந்து எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார், தொடர்ச்சியாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் பொருந்தக்கூடியவர் சரோஜா தேவி. முக…