Author: Six Side Media

  • அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

    ‘இனிமேல் இதைச் செய்யாதீர்கள்; இல்லையெனில் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என்று அமெரிக்காவுக்கு, ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? ஏன் ரஷ்யா இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 32 ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ள ராணுவக் கூட்டணியே நேட்டோ ஆகும். இந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில்தான், 2022ஆம் ஆண்டு முதல்…

  • சிறுவர் துஷ்பிரயோக வீடியோக்கள்: கனடாவில் சிங்கள வைத்தியர் கைது

    ரோரன்ரோ நகரில் உள்ள பிரபல SickKids (The Hospital for Sick Children) குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் டிலான் திஸாநாயக்க – வயது 44, குழந்தைகள் துஷ்பிரயோக வீடியோக்கள் தொடர்பாக கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரோரன்ரோ பொலிஸின் இணையவழி குழந்தை சுரண்டல் விசாரணைப் பிரிவு  மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை இணையத்தில்…

  • இந்தியாவில் உண்ணாவிரதம் முடிந்தது..

    இந்தியாவில் Neet மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜாந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்  தனது 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உத்திரவாதங்களைத் தொடர்ந்து,…

  • சிங்கப்பூர் மீது அமெரிக்கா 12.5% வரி

    கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க சிங்கப்பூர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 12.5 வீத புதிய வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இப்புதிய வரி விதிப்பு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி  அமைப்பின் ‘பிரிவு 301’  விசாரணையின் முடிவாக, 2026 ஜூலை 24 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூர் நேரப்படி நண்பகல் 12:01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.  சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில்…

  • நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபையில் விவாதம்

    நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்க்கட்சியினரால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நீதியமைச்சர் தனது பொறுப்பை…

  • கொழும்பு தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு

    கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இன்று மாலை (ஜூலை 23, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்து, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய…

  • விளையாட்டை மக்களின் கலாசாரமாக மாற்ற வேண்டும் – இலங்கை ஜனாதிபதி

    விளையாட்டை வெறும் போட்டிகளோடு சுருக்கிவிடாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒரு கலாசாரமாக மாற்ற வேண்டும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (ஜூலை 23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றியடைவது மட்டுமன்றி, முழு சமூகத்திலும்…