Author: Six Side Media

  • யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித ராஜபக்ஷ உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை…

  • தென்சீனக் கடலில் மீண்டும் சீனா–பிலிப்பைன்ஸ் மோதல்

    தென்சீனக் கடலில் உரிமைக் கோரிக்கையை மையமாகக் கொண்டு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசுக் கப்பல்களும் மீனவர் படகுகளும் பயணித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சீன கடலோர பொலிஸ்படை கப்பல்கள், இரண்டாவது நாளாகவும் ‘வொட்டர் கேனான்’ மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவற்றைத் தடுக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சீனக் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் படகிற்கு மிக அருகில் சென்று மோதும் அபாயத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த வாரத்தில் மட்டும்…

  • இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (25) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளது. அதன்படிஇ ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,530 ஆகப் பதிவாகியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகக்கூடிய…

  • பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரம் – 2 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

    தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி அதிவேகமாக பரவி வருவதால், இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். ஜிரோண்டே பகுதியில் 1,10,000 பேரும், லாண்டெஸ் பகுதியில் 31,000 பேரும் என மொத்தம் 1,41,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் தீ சூழ்ந்ததால் சிலர் படகுகள் மூலமாகவும் தப்பியுள்ளனர். மேலும் 53 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மாட்ரிட் மற்றும் அவிலா மாகாணங்களில் தீ தீவிரமடைந்ததால் 60,000…

  • தமிழ் நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்கள்

    தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24). காவல்துறையினர் தாக்கியதில் தலையில் காயம் அடைந்து உயிரிழந்திருக்கிறார் என்ற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்… இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்… இது 2025-ம்…

  • கால்பந்து உலகின் புதிய இளவரசன் லாமின் யமால்

    கால்பந்து உலகின் புதிய இளவரசன் லாமின் யமாலின் வியக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு! நண்பர்களே, உங்கள் 15 அல்லது 16 வயதில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? பள்ளிக்கூடம், தேர்வுகள், நண்பர்களுடன் அரட்டை என்றுதானே இருந்திருக்கும்? ஆனால், அதே வயதில் உலகக் கால்பந்து வரலாற்றின் அத்தனை சாதனைகளையும் தலைகீழாக மாற்றி எழுதியவர்தான் லாமின் யமால் இன்று பேஸ்புக்கில் எந்தப் பக்கம் பார்த்தாலும் இவர்தான் பேச்சு. இவர் கோல் அடித்ததும் தனது விரல்களால் காட்டும் ‘304’ என்ற குறியீடு உலகப்…

  • ஈழமுரசின் இன்றைய நாள் ராசி பலன் 25.07.2026- சனிக்கிழமை

                பஞ்சாங்கம் நாள்                              சனிக்கிழமை திதி                                ஏகாதசி பகல் 1.55 வரை பிறகு துவாதசி நட்சத்திரம்                அனுஷம் காலை…

  • நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று முற்பகல் 11.30 முதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக…

  • நிலவில் 250 முறை நில அதிர்வு ஏற்பட்டதை, ‘பிரக்யான் ரோவர்’ பதிவு செய்துள்ளது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இல்ஸா (ILSA – Instrument for Lunar Seismic Activity) என்ற அதிர்வு அறியும் அதிநவீனக் கருவி, நிலவின் தென் துருவத்தில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சிக்னல்களைப் பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 250+ அதிர்வுகளில், சுமார் 200 அதிர்வுகள் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகர்ந்தபோது ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் பிற அறிவியல் கருவிகளின் செயல்பாடுகளோடு தொடர்புடையவை ஆகும். மீதமுள்ள 50 அதிர்வுகள் எந்தவொரு ரோவர்…

  • இன்றைய ராசி பலன்- 24.07.2026

    மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள்…