Author: Six Side Media
-
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பெல்லன்வில பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
-
ஒரே வீட்டில் 20 ஆண்டுகளாக மௌனமாய் இருந்த தம்பதியர்
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனமாக வாழ்ந்த தம்பதியரின் விசித்திரமான உண்மைச் சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் நாரா பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா ஆகியோரே இந்த தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தபோதிலும், கணவர் ஒடோ கடந்த 20 ஆண்டுகளாகத் தன் மனைவியுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வந்தார். மனைவி யுமி தொடர்ந்து அவரிடம் பேச…
-
கவிஞர் கண்ணதாசனும் தத்துவங்களும்
கவியரசன் கண்ணதாசன் சென்னைக்கு வந்தது சினிமாவிற்கு பாட்டு எழுதுவதற்கு அல்ல, ஆனால் சூழல் அவரை பாடலாசிரியராக்கியது. நல்ல காலம் அதனால்தான் நாம் நாலாயிரத்திற்கும் அதிகமாக நல்ல பாடல்களை பெற்றோம் என்றார் அவரது மகனும் அவருக்கு உதவியாளராகவும் இருந்த கண்மணி சுப்பு. காலங்களில் அவன் வசந்தம்’ என்ற தலைப்பில் கண்ணதாசனின் புகழ்பாடும் நிகழ்வை இசைக்கவி ரமணம் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார். மாதந்தோறும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்வில் அவருடன் கண்ணதாசனை வாசிப்பவர்களும்,…
-
இன்று முதல் அரசியலில் ஈடுபடமாட்டேன் : பாமக நிறுவனர் ராமதாஸ்
இன்று முதல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 88வது பிறந்தநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்திலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒரே காரில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றனர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது: எனது 88வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். பா.ம.க.வை இனி அன்புமணி…
-
இந்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,இந்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு பிரதமர்…
-
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்த ஏவுகணைகளை தடுத்து அழித்தது சவூதியிலுள்ள கிரேக்க வான் பாதுகாப்பு படை!
சவூதி அரேபியாவின் யான்பு பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம் வெற்றிகரமாக மறித்து அழித்துள்ளனர். சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க தயாரிப்பான பேட்ரியோட்வான் பாதுகாப்புத் தொகுதியை கிரேக்க இராணுவத்தினர் அங்கு இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று யேமனில் இருந்து…
-
ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!
தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் கலந்துரையாடுவதற்கு பிரதான தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில், இணைந்து செயற்படத் தீர்மானித்த 6 கட்சிகளின் பங்கேற்பில், நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்தரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்…
-
சீன நாட்டவரின் மரணம் : விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு போர்ட் சிட்டி துறைமுக நகரத்தில் இருந்து சீன நாட்டவர் ஒருவரைக் கடத்திச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சீன நாட்டவர் இரண்டு பேரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சீன நாட்டவரின் உடல், எஹெலியகொடவின் வனப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று சீன…
-
இலங்கை மகாவலி ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு
கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை…
-
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித ராஜபக்ஷ உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை…