Author: Six Side Media

  • இதயத்தில் தவறுதலாக அறுவைச் சிகிச்சை: பெண் மரணம்

    இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது.…

  • மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

    நடிகரும், பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமான நிலையில் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஜாய் கிரிசில்டா என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டார் . ஆனால், தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ரங்கராஜ் தன்னை ஏற்றுக்கொள்ளவும், சந்திக்கவும் மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா கண்ணீரோடு செய்தியாளர்களிடமும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்..…

  • உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – சிறுமிகள் இருவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

    ரஷ்யா ஒரு ‘பெரும் தாக்குதலுக்கு’ தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள்…

  • பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை விவகாரம் – நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்

    கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து உடலியல் சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (30) நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைய, பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பகுதியைச்…

  • செம்மணி விவகாரத்துக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி

    செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது. இதன்போது ‘மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்’ ‘செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்’ ‘உலகமே செம்மணியை மறந்து விடாதே!’ உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை…

  • பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜனவரியில் விசாரணைக்கு

    தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • இலங்கையில் விருந்துகளில் கலந்து கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கு போதை மாத்திரை

    கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன்…

  • ஒரு எறும்பு 21 ஆயிரம்!.. கென்யாவிலிருந்து கடத்திய சீனருக்கு சிறை தண்டனை!…

    விமானம் மூலம் ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்துவது தொடர்பான பல செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கென்யாவிலிருந்து சீனாவுக்கு எறும்புகளை கடத்திய ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் 10ஆம் தேதி கென்யாவின் நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குயின் கார்டன் என அழைக்கப்படும் ராணி எறும்புகளை கடத்திய ஜான் என்கிற நபர் பிடிபட்டார்.எறும்புகளை கடத்திய ஜானுக்கு 8000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டதோடு ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.. கென்யாவை…

  • ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்

    முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த போது, மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதுடைய தமிழ் சிறுமியான ஆர். ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பல தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முக்கிய வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளின் விபரங்கள் 1. பெற்றோரின் வாக்குமூலம் தமது மகள் வறுமை காரணமாகவே இடைத்தரகர் ஒருவர் மூலமாக கொழும்பிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பி…

  • 8000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் உலகப்புகழ் பெற்ற BMW கார் நிறுவனம்

    உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மின்சார வாகன தயாரிப்புக்கான தாங்க முடியாத செலவுகள், சீன நிறுவனங்களிடமிருந்து எழும் கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜெர்மனியின் வாகனத்துறை தற்போது வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும்…