Author: Six Side Media
-
கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி!..
பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படும் ஒன்றுதான் இந்த கிசுகிசு. ஏனெனில் நமக்கு தெரிந்த ஒருவர் பற்றிய ரசிகசியங்களை பேசுவது என்பது எல்லோருக்கும் அலாதியான ஒன்றுதான். அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அது உண்மைதான் போல என பலரும் சொல்லி சந்தோஷப்படுவார்கள். ஆனால் உண்மை வேறாகவும் இருக்கலாம். நாமெல்லாம் கிசுகிசு என்றால் அதைப்பற்றி பேசுவதோ இல்லை அதை கேட்பதோடு நின்றுவிடுவோம். ஆனால் கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுசுக்கள் அதாவது மற்றவர்களின்…
-
ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி – பழனி திகாம்பரம் எம்.பி கண்டனம்
மலையகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன முரண்பாடுகள் நாட்டில் அமைதியின்மையையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. அதேநேரம், மலையகத்தில் இன மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மூவின…
-
பிரேசிலில் விமான விபத்து – நால்வர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (08) இடம்பெற்ற விமான விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட திஜூகா தேசியப் பூங்காவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் விமானியும் மூன்று பெண்களும் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். செங்குத்தான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத மலைப்பகுதியில் விமானத்தின் எரிந்த பாகங்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மூன்று கொலம்பிய…
-
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் வேலை இழக்கும் சில வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை நீக்குவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகின்றது. இந்த முன்மொழிவு தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளதுடன், இதுவரை இறுதி விதியாக்கப்படவில்லை. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் முழுமையான விவரங்களும் இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. தற்போதைய விதிமுறைகளின்படி, வேலை இழக்கும் குறிப்பிட்ட வகை குடியேறாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள், புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக அதிகபட்சமாக…
-
மொஜ்தபா கொமெய்னி நலமாக இருக்கிறார்! ஈரான் வெளியிட்ட காணொளி
ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவ்வாறு செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து ஈரான் ஊடகம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்ததிலிருந்து கொமெய்னி ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை. இந்த குறுகிய, காணொளியில் கொமெய்னி தனது…
-
அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு
அமெரிக்கா உடன் நேரடியாக பேச மாட்டோம். மத்தியஸ்தர்கள் வாயிலாகவே பேசுவோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி கூறியுள்ளார். “அமெரிக்கா – ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கான நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் உருவாக்கி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தை மீறி நடத்தும் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாத வரை பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவதற்கான சூழல் உருவாகாது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம்.” என அப்பாஸ் அராக்ஸி கூறியுள்ளார். இதனிடையே, ஈரான் பாராளுமன்றத்தின் துணை…
-
ஈரானின் நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது – ஈரான் தெரிவிப்பு
போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸ் தொடர்பாக ஓமனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஆனால், ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்கா ஜூன் மாத ஒப்பந்தத்தை மீறியதற்கான இழப்பீடு வழங்குவது மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்படுவதைப் பொறுத்து அமையும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவுடன்…
-
சிறையிலுள்ள சகோதரருக்கு ‘சில்லி பேஸ்ட்டில்’ போதைப்பொருள் கொண்டு சென்ற இருவர் கைது!
களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். மில்லனிய – பட்டகொட வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால், வீதித் தடையொன்றில் வைத்து இவர்கள்…
-
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், செல்போன் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களிடம் பழகி, ரூ.6 கோடிக்கும் மேல் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் பல்லவி சிங், அவர்களுக்குத் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவார். பின்னர் நேரில் சந்தித்து அந்தரங்கமாகப் படங்கள் எடுத்து, அவற்றைக் காட்டி மிரட்டி பணம் பறித்து…
-
2026-ன் முதல் 6 மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்திய கனடா
வடஅமெரிக்க நாடான கனடாவில் தங்கியிருந்த இந்தியர்களுக்குப் பேரிடியாக, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, இதே காலகட்டத்தில் அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்களின் எண்ணிக்கையை விடக் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் குடிவரவு மற்றும் விசா விதிகளை மீறியவர்கள், போலி ஆவணங்கள் மூலம் தங்கியிருந்தவர்கள் மற்றும் விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கையைக் கனடா அரசு…