Author: Six Side Media

  • ஸ்வீடன் பாடசாலை ஒன்றில் வாள் தாக்குதல்: பலர் காயம்

    ஸ்வீடனில் உள்ள மத்திய பாடசாலை ஒன்றில் வாளுடன் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். ஸ்வீடனின் ஃபாகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல்ஸ்கோலன் பாடசாலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. எனினும், சந்தேக நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வன்முறையில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நீதித்துறை அமைச்சர் குன்னர் ஸ்டிரோம்மர் ஆகியோர் தங்களது…

  • யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்

    யுக்ரைனின் ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதால், யுக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு சாதனை அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனினும்,யுக்ரைன் தனது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் விநியோக மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தநிலையில் யுக்ரைனின் தொடர்…

  • பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது

    இங்கிலாந்தில் செயற்படும் ‘பாலஸ்தீன எக்சன்’ (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லங்காஷையர் மாகாணத்தில் உள்ள பர்ன்லி (Burnley) நகரில் பார் க்ளேஸ் வங்கி கிளை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி தண்டனை வழங்க முடியாது என்று, பிரெஸ்டன்…

  • பண்டத்தரிப்பு சம்பவம்! கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு

    பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக…

  • பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை

    சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹெடின்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது அப்துல்லா ஷாபிக் 61 ஓட்டங்களை பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் எவரும் 30க்கும் அதிக எண்ணிக்கை ஓட்டங்களை பெறவில்லை. ஒலே ரொபின்சன் 5 விக்கட்டுக்களையும், ஜோஸ் டங் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடு;த்தாடிய…

  • ‘தி சைக்கிள் ஒஃப் லவ்’- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

    ஜாதி அடக்குமுறை மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி சைக்கிள் ஒஃப் லவ்’ (The Cycle of Love) என்ற புதிய திரைப்படம் குறித்த தகவல்களை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்குத் தன் காதலியைத் தேடி 6,000 மைல்கள் சைக்கிளிலேயே பயணம் செய்த இந்தியக் கலைஞர் பி.கே. மகாநந்தியா (PK Mahanandia) வின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.a இந்தியாவில் அவர் எதிர்கொண்ட ஜாதி…

  • டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு

    தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இளவரசர் ஹரி உள்ளிட்ட ஏழு முக்கியப் பிரமுகர்கள் ‘டெய்லி மெயில்’ பத்திரிகையின் வெளியீட்டாளரான ஏ.என்.எல் (ANL) நிறுவனத்திற்கு முதற்கட்டமாக 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.என்.எல் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தொகை முதற்கட்ட நஷ்டஈடாகச் செலுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • அதிபரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவர்கள் – விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

    இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின்…

  • பிராட் பீக் பனிச்சரிவில் காணாமல் போன அமெரிக்க மலையேற்ற வீரரின் உடல் கண்டெடுப்பு

    பாகிஸ்தானில் உள்ள பிராட் பீக் சிகரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த 10 பேர் கொண்ட சர்வதேச மலையேற்றக் குழுவில், காணாமல் போன கடைசி நபரான அமெரிக்க மலையேற்ற வீரர் மல்லோரி கெய்ஸின் (Mallory Geis) உடலை தேடுதல் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். டெக்சாஸ் மாநிலம் சான் அன்டோனியோவைச் சேர்ந்த 39 வயதான மல்லோரி கெய்ஸ், பாகிஸ்தானில் உள்ள 8,000 மீட்டர் உயர சிகரத்தில் ஏற முதன்முதலாக முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. “அனைவராலும் ஆழமாக…

  • டிரம்ப்பின் உதவியாளர் நடாலி ஹார்ப் பற்றி அனைவரும் பேசுவது ஏன்?

    ஜார்ஜியா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சார நிகழ்வு ஒன்றில் பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 35 வயதான சிறப்பு உதவியாளர் நடாலி ஹார்ப் (Natalie Harp) ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என CBC News செய்தி வெளியிட்டுள்ளது. செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்பை விமர்சித்துப் பேசும்போது, அதிபர் “தனது நடன அரங்கை (ballroom) கட்டவும், கத்தார் அமீரால் பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பற்ற பறக்கும்…