Author: Six Side Media

  • நேபாள விபத்துக்கு காரணம் இதுதான்! காட்டிக் கொடுத்தது இஸ்ரோ?

    நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால், ரசுவா, ரசுவாகடி, திமுரே ஆகிய பகுதிகளும், திரிசூலி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களும், கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானதேடு, 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, நேபாளத்தை சேர்ந்த 127 பேரும், இந்தியாவை சேர்ந்த 178 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 65 பேரும் என, 33 நாடுகளை சேர்ந்த 644 பேர்…

  • ஐந்தில் இரு பெண்களுக்கு கணவர்களால் துன்புறுத்தல் – ஆய்வில் வெளியான தகவல்

    இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேபோன்று, இலங்கையிலுள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் 15 வயதிலிருந்தே சரீர மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 08 மாவட்டங்களில் 888 பெண்கள் மற்றும் 109 பணியாளர்களூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் அனுபவங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையில், இலங்கையில்…

  • 21 ஆண்டுகளில் 469 உயிர்களை காப்பாற்றிய சீன மனிதர்

    சீனாவில் உயிர்மைப்புக்கு முயற்சிக்கும் நபர்களைத் தடுப்பதற்காக கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக யாங்சே நதி பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சென் சி என்ற நபர், இதுவரை 469 பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சென் சி, தனது இளமைப் பருவத்தில் வீடின்றி வாழ்ந்ததுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். பின்னர் பழக்கடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை நிலைப்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு நான்ஜிங் யாங்சே நதி பாலத்தில் உயிர்மைப்புக்கு முயன்ற…

  • நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் – புதிய ஏரி உருவானதால் எச்சரிக்கை

    நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் உருவாகி நேபாளம் வழியாகப் பாயும் இந்த ஆறுகள் பின்னர் போடேகோஷி நதியுடன் இணைகின்றன. புதிய ஏரியில் நேற்று காலை வரை சுமார் 20 இலட்சம்…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஆகஸ்ட் 28, 2026 வெள்ளி

    பஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி பௌர்ணமி காலை 10.29 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் சதயம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் பூசம் சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால்…

  • குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

    சீனாவில் மனித வடிவிலான ரோபோக்களின் (Humanoid robots) உற்பத்தி மற்றும் அரச முதலீடுகள் அதிகரித்துள்ளன. எனினும், அவை, இன்னும் தொழிற்சாலைப் பணிகளுக்குப் போதுமான வேகம் மற்றும் நுண்ணறிவுடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் 100-க்கும் மேற்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் பெட்டிகளை வரிசைப்படுத்துவது மற்றும் நூடுல்ஸ் பொதி செய்வது போன்ற எளிய பணிகளுக்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை மிகவும் மெதுவாகவும் தடுமாற்றத்துடனும்…

  • அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

    அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு (CIA) தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) இரகசியமாக மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தப் பயணத்தை “சாதாரணமானது” என்று வர்ணித்தாலும், யுக்ரைன் போரில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சிஐஏ தலைவர் திடீரென மொஸ்கோவிற்குச் சென்றது அரசியல் தரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. யுக்ரைன் போரில் நிலவிவரும் தேக்கநிலை குறித்தும், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு எதிராக…

  • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதில் சட்டரீதியான தடை

    சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டரீதியான தடை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனினும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக விஜேபால குறிப்பிட்டார். “அவரை நாட்டிற்கு நாடுகடத்துவதில் சட்டரீதியான தடை உள்ளது” என்று தெரிவித்த அமைச்சர், எனினும்…

  • துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான முன்னாள் ICE அதிகாரி டெக்சாஸ் அதிகாரிகளால் விடுதலை

    மினசோட்டாவில் (Minnesota) நடைபெற்ற குடிவரவு சோதனையின் போது, வெனிசுலாவைச் சேர்ந்த ஜூலியோ சேசர் சோசா-செலிஸ் (Julio Cesar Sosa-Celis) என்பவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரி கிறிஸ்தியான் காஸ்ட்ரோ (Christian Castro), டெக்சாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  டெக்சாஸ் சட்டப்படி, நாடுகடத்தல் உத்தரவு பெறப்பட்ட நபரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. அந்த கெடு முடிந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். மினசோட்டா மாநிலத்தின் நாடுகடத்தல்…

  • ஹார்முஸ் பாதை குறித்து கதார்-ஈரான் பேச்சுவார்த்தை;

    ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலத்தடி கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து கத்தாரும் ஈரானும் விவாதித்தன. இதனுடன் பிராந்திய பதற்றத்தைக் குறைப்பதற்கும் உரையாடலுக்கான சூழலை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து ஈரானின் ஆயத்த நிலையை மதிப்பிடுவதற்காகக் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெஹ்ரானுக்கு விஜயம் செய்தார். ஓமன்-ஈரான் அறிவித்த தற்காலிக கப்பல் பாதை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த…