நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள்

நேபாளப் பெருவெள்ளம் கொரத்தாண்டவமாடி ஒரு மாதம் ஆன நிலையிலும், தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளன சில கனேடிய குடும்பங்கள்.

நேபாளப் பெருவெள்ளம் ஆடிய கோரத்தாண்டவத்தின் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னமும் காணவில்லை.

நேபாளப் பெருவெள்ளத்தில் பலியான 1,400க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 5,600க்கும் மேலானவர்கள் நிலை இன்னமும் தெரியவில்லை.

நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமானவர்களில், 29 பேர் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள்.

ஆகத்து மாதம் 26ஆம் திகதி நிகழ்ந்த நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த சுமித், சுபாக்‌ஷி ராவ்லாவும் அடங்குவர்.

தங்கள் பிள்ளைகளுடன் இந்தியா சென்றிருந்த ராவ்லா தம்பதியர், பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு கைலாஷ் மான்சரோவருக்குச் செல்ல, அப்போதுதான் நேபாள – திபெத் எல்லையில் பெருவெள்ளம் உருவானது.

வெள்ளத்துக்குப் பின் ராவ்லா தம்பதியர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தியா சென்றிருந்த ராவ்லா தம்பதியரின் பிள்ளைகள் கனடா திரும்பிவிட்ட நிலையில், அவர்களை அவர்களுடைய உறவினர்கள் மாறி மாறி கவனித்துவருகிறார்கள்.

அதேபோல, நேபாளம் சென்றிருந்த Port Moody என்னுமிடத்தைச் சேந்த தாவல், மேகா சிங் தம்பதியர் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆக, தங்கள் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் பெருவெள்ளத்தின்போது காணாமல் போன கனேடியர்களின் உறவினர்கள்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *