கனடாவின் கால்கரியில், முதுகலைப் படிப்பு மற்றும் பணி அனுமதி அதாவது, PGWP விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சர்வதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் கனடா எல்லைப் பணிகள் முகமையான CBSA அதிகாரிகள் மாணவர்களின் குடியேற்ற நிலை மற்றும் அடையாள ஆவணங்களைச் சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும், அவர்களில் பலர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. சுமார் 10 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், CBSA அதிகாரிகள் போராட்ட இடத்துக்கு வந்து மாணவர்களின் அடையாள ஆவணங்கள், கல்வி அனுமதி மற்றும் பணி அனுமதி ஆவணங்களைச் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், யாரேனும் கைது செய்யப்பட்டார்களா அல்லது அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
Leave a Reply