Category: முக்கிய செய்தி

  • ‘இந்தியா வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது’ – ரஷ்யா குற்றச்சாட்டு

    இந்தியாவை வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்றும் இந்தியாவை கட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்றும் இந்தியாவுக்கான ரஷ்ய தூதுவர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற என்.டி.டி.வி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த மாநாட்டில் பேசிய அவர், சீனா போன்ற மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ரைசினா மாநாட்டில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர், இந்தியாவை…

  • மீண்டும் போர்? “நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!” – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

    கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது. ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று போர் நிறுத்தத்தை நோக்கிப் பேசுவது போலப் பேசியிருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்போ, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு,…

  • திலீபன் சிலை அகற்றப்பட்டமை வேதனையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றது – சீமான்

    தியாகதீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத்தமிழர்கள் உணர்வுடன் கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றிருப்பது வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார். தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் பொலிஸார் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்ணாமலும் நீர் அருந்தாமலும் அகிம்சை வழியில் மக்களுக்காக உயிர்துறந்த திலீபன் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூட ஏற்றுக்கொள்ள…

  • அவுஸ்திரேலிய அரசின் இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ.

    அவுஸ்திரேலிய அரசு இணையதளம் மற்றும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு செயற்கை தொழில்நுட்ப (ஏ.ஐ.) மென்பொருளை  சில மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவியது. ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் இந்த ஏஜென்ட் தனது பணியை செய்த அதேவேளையில், அந்த இணையதளத்தையே முடக்கியதுடன், அரசின் தரவுத்தளங்களில் உள்ள தவறான சான்றுகளை தேடியது. மேலும் தனிப்பட்ட என்கிரிப்டட் திறவு கோல்களையும் அணுக முயன்றது. இந்த சம்பவம் ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஏ.ஐ. ஏஜென்ட்களின் பாதுகாப்ப குறித்தும்…

  • கனடாவில் ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

    கனடாவின் மாண்ட்ரீல் நகரின் தெற்குப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். செயிண்ட்-பிரிஜிட்-டிபெர்வில் நகராட்சியில் உள்ள 10-வது நெடுஞ்சாலைக்கு அருகே ராங் டெஸ் எகோசைஸ் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததையடுத்து, பிற்பகல் 2:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாகாண காவல் துறையான சுரேட்டே டு கியூபெக் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல் துறையின் சார்ஜென்ட் ஆட்ரி-அன்னே பிலோடோ உறுதிப்படுத்தினார். விரைந்து செயல்பட்ட மீட்புக் குழுவினர் ஒரு…

  • அரபு கட்சிகளுக்கு NO.. நெதன்யாகு மட்டும் போட்டியில்? இஸ்ரேலில் கொந்தளிப்பு!

    2026 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இஸ்ரேல் நாடாளுமன்ற (Knesset) தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டின் இரண்டு முக்கிய அரபு பெரும்பான்மை அரசியல் கூட்டணிகளை போட்டியிடத் தகுதியற்றதாக இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனிய குடிமக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு இரண்டு முக்கிய அரபு அரசியல் பட்டியல்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) –…

  • ‘இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்போம்’ – ஈரான் ஜனாதிபதி

    தனது அரசாங்கம் இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்கும் என்றும் ஈரான் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் சூளுரைத்தார். சண்டையை முடிவுக்குக் கொண்டுவருதல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியவற்றுக்காக ஈரான் முன்வைத்த ஏழு நாள் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய…

  • இமயமலை பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயம்

    நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் இருந்து இமயமலை ஏறச் சென்ற குறித்த 10 மலையேற்ற வீரர்களும் ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்துள்ளனர். இதன்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் தங்கியிருந்த கூடாரம் பனியில் புதைந்துள்ளது. இதனால் அதில் தங்கியிருந்த 10 மலையேற்ற வீரர்களும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான…

  • மீண்டும் பேரழிவில் நேபாளம்|கொட்டும் மழை; கரைபுரண்ட ஆறுகள்; அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!!

    நேபாளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் புதிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் தாக்கம் இன்னும் நீங்காத நிலையில், அந்த பேரிடரில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்ததாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் பொயுள்ளனர் என்றும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை…

  • “ஏமனில் நடப்பவற்றுக்கும் ஈரானுக்கும் தொடர்பில்லை” – ஜனாதிபதி பெசெஷ்கியன் கருத்து

    ஏமனில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்களுக்கும் ஈரானுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏமனின் ஹூதி போராளிகளும் சவூதி அரேபியாவும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஈரான் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அநீதிக்கு உள்ளாக்கப்படும் அனைவருடனும் ஈரான் உறுதியாகத் துணைநிற்கும்…