Category: முக்கிய செய்தி
-
5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து,இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை…
-
இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்
நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு…
-
உலக சந்தையில் நாளாந்தம் அதிகரிக்கும் எண்ணெய் விலை
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது. இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும். கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9…
-
இந்தியா சென்றார் ரஷ்ய ஜனாதிபதி
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி…
-
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வகையான எண்களைப் பயன்படுத்தி லொத்தரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அவர் வாங்கிய மூன்று ‘போனஸ் மேட்ச் 5’ (Bonus Match 5) லொத்தரி சீட்டுகள் மூலம் அவருக்கு மொத்தம் ரூ.1.30 கோடி (இந்திய ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது. தன் நீண்ட நாள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ச்சியாக ஒரே எண்களைப் பயன்படுத்தி வந்த இவரின் இந்த…
-
ஈரானில் மர்மமான நடவடிக்கை – ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஈரானின் Pickaxe Mountain பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கத் தளத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மலையின் கீழ் யுரேனியம் செறிவூட்டும் சென்ட்ரிஃபியூஜ்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகித்து வரும் நிலையில், அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது. ஈரானின் ‘Pickaxe Mountain’ பகுதியில் மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம்…
-
கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா.. 3 பேர் பலி
கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் கடலில் மூழ்கியதுடன், அதில் இருந்த 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த அந்தக் கப்பல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் கப்பல் கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியதாகக்…
-
மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!
சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்நிலையிலேயே…
-
உன் மகளை நான்தான் வளர்த்தேன்!.. 45 லட்சம் சம்பளம் வேணும்!.. பாட்டி தொடர்ந்த வழக்கு!..
தாத்தா பேரனை வளர்ப்பது.. பாட்டி பேத்தியை வளர்ப்பது என்பதெல்லாம் பழைய காலமாக மாறிவிட்டது. ஏனெனில் தற்போது கூட்டு குடும்பம் என்பதே பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதோடு சிறியவர்கள் பெரியவர்களை மதிப்பதும் இல்லை. அதேநேரம் சீனாவில் இன்னும் பாரம்பரிய பழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு குடும்ப செண்டிமெண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.. சீனாவில் Ms Xu என்கிற 60 வயது மூதாட்டி தனது பேத்திய வளர்த்ததற்காக தனது மகனிடம் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நீதிமன்றத்தில்…
-
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.