Category: முக்கிய செய்தி
-
டெல்லியில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (12) ஆரம்பமாகி, நாளை (13) நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இந்தியா வரவுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்…
-
உலக எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயார் – BRICS மாநாட்டில் புடின் பேச்சு
உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும், BRICS நாடுகளுடன் வணிகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BRICS வணிக மாநாட்டில் உரையாற்றிய புடின், “உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், நாங்கள் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்கவும், ஆர்க்டிக் போக்குவரத்து வழி மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழி போன்ற நம்பகமான லாஜிஸ்டிக் பாதைகளை…
-
இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது. 1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற “Christina Stambolian” ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார். இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’…
-
உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஈரான் படைகள்!
தங்களுடைய கடற்படைத் தளத்தை ஈரான் அழித்திருப்பதாக அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஈரானுக்கு அதிக அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்தன. இடையில் சில நாட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அது, மீண்டும் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.…
-
மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்- ஐரோப்பிய கால நிலை மையம் எச்சரிக்கை
ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. மேலும், வலுவடைந்து வரும் எல் நினோ காரணியால் வரவிருக்கும் நாட்களில் நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கடல் பரப்பில் உலகளாவிய வெப்பம் நிலவியதன் உச்சக்கட்டமாக, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடுமையான வெப்ப அலைகளும் காட்டு தீயும் ஏற்பட்டன. கோப்பர் நிகஸ் காலநிலை மாற்ற சேவை…
-
உலக வல்லரசையே அதிரவைத்த தாக்குதல்.. இரட்டைக் கோபுர தகர்ப்பின் 25-வது ஆண்டு!!
2001 செப்டம்பர் 11. காலை 8:46 மணி. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வல்லரசின் கம்பீர அடையாளமாக நின்ற உலக வர்த்தக மையத்தின் மீது அதிபயங்கர வேகத்தில் மோதியது. கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் கிளர்ந்தெழுந்தன. தொடக்கத்தில் இதனை ஒரு விபத்து என்றே ஊடகங்களும் மக்களும் கருதினர். ஆனால், சரியாக 17 நிமிடங்கள் கழித்து, காலை 9:03 மணிக்கு, மற்றொரு விமானம் அருகிலிருந்து கோபுரத்தை துளைத்தது. மூன்றாவது விமானம் காலை 9:37 மணிக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon)…
-
ஈரான்,பாகிஸ்தான் இடையே ஹவுதி தாக்குதல்கள் குறித்து பேச்சு
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதலை தணித்து, மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க–இஸ்ரேல் போர், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியம் மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இதேவேளை, யேமனின்…
-
5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து,இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை…
-
இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்
நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு…
-
உலக சந்தையில் நாளாந்தம் அதிகரிக்கும் எண்ணெய் விலை
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது. இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும். கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9…