Category: முக்கிய செய்தி

  • ஈரான் போர்| அமெரிக்க பலி எண்ணிக்கை.. வெளியான புதிய தகவலால் பரபரப்பு!

    அமெரிக்கா–ஈரான் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக The Washington Post வெளியிட்ட செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தி கூறிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சத் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். Washington Post வெளியிட்ட தகவலின்படி, ஈரான் போரின் தொடக்கம் முதல் குறைந்தது 22 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  • 6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!

    அமெரிக்கா–இஸ்ரேல் உடனான போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயுதம் ஏந்திய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது. ‘Janfada-ye Iran’ ‘ஈரானுக்காக தியாகம் செய்பவர்கள் என்ற பெயரில் நடைபெற்ற இந்த அரசாங்க ஆதரவு பேரணி, போர் தொடங்கிய பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய பேரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் ராணுவ உடை அணிந்தவர்கள் ஈரான் கொடிகளை ஏந்தியபடி ஈரான் நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர்.…

  • வேல்ஸ் இளவரசி Diana மரணம்.. Charles சொன்ன அதிர்ச்சி வார்த்தை.. 29 ஆண்டுக்குப் பின் சர்ச்சை!

    இளவரசி டயானா… இந்தப் பெயரை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. தனது கருணை பொங்கிய செயல்களாலும், மக்களோடு மக்களாக கலந்து பழகிய பண்பாலும், விழிப்புணர்வு செயல்களுக்காகவும் மட்டுமின்றி, தனது அன்பான அணுகுமுறையால், உலக மக்களின் மனதை வென்றவர் இளவரசி டயானா. பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸை தனது 20-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்த டயானா, பின்னர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று அரச குடும்பத்தைவிட்டு வெளியேறினார்.…

  • விஷச்சாராயம் அருந்தி 48 பேர் பரிதாப பலி

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் மலிவு விலைச் சாராயங்களை அருந்துவது வழக்கமாக உள்ளது. இவ்வாறான சட்டவிரோதச் சாராயங்களின் வீரியத்தை அதிகரிப்பதற்காக அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், அவை விஷச்சாராயமாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒண்டோ (Ondo) மாநிலத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல இவ்வாறான சாராயத்தை அருந்தியுள்ளனர்.…

  • நீண்ட நாள் ஆசை சக்சஸ்: “Greenland-ன் ‘நிரந்தர’ கன்ட்ரோல் இனி அமெரிக்காவிற்கே!” – ட்ரம்ப் மகிழ்ச்சி

    அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அதன் இருப்பிடத்தின் காரணத்திற்காகவும் எப்போதுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கிரீன்லாந்து மீது கண் உண்டு. கிரீன்லாந்தை வாங்கவெல்லாம் பிளான் செய்தார் ட்ரம்ப். ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை.ஆனால், தற்போது டென்மார்க்குடன் ஒப்பந்தம் போட்டு, கிரீன்லாந்தின் ‘நிரந்தர கட்டுப்பாட்டை’ பெற்றிருக்கிறார் ட்ரம்ப். இது குறித்து ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.ட்ரம்ப் தனது பதிவில், “அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை அறிவிப்பதில்…

  • ‘நான் அதிபரான பின் வரலாற்றிலேயே முதன்முறையாக!’-தன்னை தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்

    2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்றார் ட்ரம்ப். அப்போதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அமெரிக்காவை மட்டுமல்ல… உலக நாடுகளையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார் அவர்.தற்போது தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், 2025-26 ஆண்டிற்கான சாதனை என்று 25 விஷயங்களை அவரே பட்டியலிட்டிருக்கிறார். அந்தப் பட்டியல் இதோ… 1. வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான அமெரிக்க எல்லையை உறுதிசெய்துள்ளோம். கடந்த 16 மாதங்களில் ஒரு சட்டவிரோதக் குடியேறி கூட அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.…

  • CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்ரம்ப் விதித்த தடை!

    உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் குறித்து குறித்த ஊடக நிறுவனங்கள் பொய்களையும் புனைவுகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஜனாதிபதி தனது ‘Truth Social’ கணக்கில் பதிவொன்றை இட்டு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளார். எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான எவ்வித குறிப்பிட்ட ஆதாரங்களையும் அவர் முன்வைக்க…

  • சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்தினருக்கு ரிஷாட் பதியுதீன் நேரில் சென்று ஆறுதல்..!

    சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது…

  • ஒருவேளை உணவுக்காக தெருவில் கையேந்தி நின்ற நான்கு வயது சிறுமி… இன்று ஸ்டெதஸ்கோப்பை ஏந்தி நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்!

    இது ஏதோ ஒரு திரைப்படத்தின் கதை அல்ல… தர்மசாலாவின் தெருக்களில் பிறந்து வளர்ந்த பிங்கி ஹர்யன் என்ற பெண்ணின் நிஜ வாழ்க்கைக் கதை! 2004-ஆம் ஆண்டு ஒரு நாள், மெக்லியோட் கஞ்சில் உள்ள ‘சரண் காட்’ குடிசைப் பகுதியின் சாலையோரத்தில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சிறுமி பிங்கியை, லோப்சாங் ஜம்யாங் என்ற திபெத்திய புத்த துறவி பார்த்தார். ஒரு கணத்தில் அந்த மனிதரின் மனதில் ஏற்பட்ட இரக்கம், அந்தச் சிறுமியின் வாழ்க்கையையே மாற்றியது. பிங்கியின் பெற்றோரிடம் தொடர்ந்து பேசி…

  • பாகிஸ்தான் நாட்டில் புனித மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் என்ற பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்காக மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், பல்வேறு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை தலைமையகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அந்த மசூதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்று அதிக அளவிலான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்துள்ளனர். அப்போது, வெடிமருந்துகள் முழுமையாக நிரப்பப்பட்ட கார் ஒன்றை ஒருவர் ஓட்டிவந்து, மசூதியின் நுழைவு வாயிலில் மோதியுள்ளார். இதன்காரணமாக, காரில் இருந்த…