Category: முக்கிய செய்தி

  • இந்தியாவில் உண்ணாவிரதம் முடிந்தது..

    இந்தியாவில் Neet மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜாந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்  தனது 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உத்திரவாதங்களைத் தொடர்ந்து,…

  • சிங்கப்பூர் மீது அமெரிக்கா 12.5% வரி

    கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க சிங்கப்பூர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 12.5 வீத புதிய வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இப்புதிய வரி விதிப்பு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி  அமைப்பின் ‘பிரிவு 301’  விசாரணையின் முடிவாக, 2026 ஜூலை 24 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூர் நேரப்படி நண்பகல் 12:01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.  சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில்…

  • நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபையில் விவாதம்

    நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்க்கட்சியினரால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நீதியமைச்சர் தனது பொறுப்பை…

  • கொழும்பு தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு

    கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இன்று மாலை (ஜூலை 23, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்து, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய…

  • விளையாட்டை மக்களின் கலாசாரமாக மாற்ற வேண்டும் – இலங்கை ஜனாதிபதி

    விளையாட்டை வெறும் போட்டிகளோடு சுருக்கிவிடாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒரு கலாசாரமாக மாற்ற வேண்டும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (ஜூலை 23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றியடைவது மட்டுமன்றி, முழு சமூகத்திலும்…

  • எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் ஆரம்பம்

    உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் நடத்தப்படும் இக்கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்…

  • கறுப்பு ஜூலை – பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

    1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் நடைபெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) இணைந்து நினைவுகூர்ந்தனர். இதனையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள் மற்றும் இழப்புகள் இன்னும் ஆறாத வடுவாகவே நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலத்தின் பாடங்களை…

  • அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

    நாடாளுமன்றத்தை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வின் போது நிலையியல் கட்டளைகள் குறித்து கேள்வி எழுப்ப முற்பட்ட போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய…

  • யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்

    முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு  அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிகக் கட்டணம் வசூலித்ததற்காக, யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள  தனியார் மருத்துவமனைக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் (ரூ. 3 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் ஒரு முழு இரத்தப் பரிசோதனைக்காக  நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாய் ஆகும். ஆனால், குறித்த மருத்துவமனை இப்பரிசோதனைக்கு 550 ரூபாய் வீதம் அறவிட்டுள்ளது. கடந்த ஜூலை 13…

  • மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கோட்டா வருகை

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (ஜூலை 23, 2026) கொழும்பில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தன்னை எக்காரணம் கொண்டும் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த ரிட் (Writ) மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.…