Category: கனடா செய்திகள்
-
கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று
கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வெளிநாடுகளில் (குறிப்பாக மெக்ஸிகோ போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில்) இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் மூலம் இது பரவுகிறது. முன்னைய காலங்களில் கீரை வகைகள் (Lettuce), கொத்தமல்லி , துளசி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பச்சையாக உண்ணும் உணவுகள் மூலம் இந்த…
-
கனடா தீ: முதியவரைத் தொடர்ந்து மனைவியும் பலி!
பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த 82 வயதுடைய அந்த மூதாட்டி, இந்த தீ விபத்தில் ஏற்கனவே பலியான 85 வயது முதியவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருந்த மற்றொரு…
-

அமெரிக்கா – கனடாவில் சுனாமி பேரழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
ஏஐ (AI) தொழில்நுட்பத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மூன்றாம் உலகப்போர் தொடர்பில் உலகலாவிய ரீதியில் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வரை நீண்டுள்ள பகுதி காஸ்கேடியா துணை மண்டலம் (cascadia subduction zone) என அழைக்கப்படுகிறது. இந்த காஸ்கேடியா பகுதியில், 9 ரிக்டர் அளவிலான…
-

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!
கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏர் கனடா விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, முக்கிய கனேடிய விமான நிலையங்கள் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்றதைத் தொடர்ந்து சில…
-
“கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை”
டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை” டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கனடிய அரசியல் வரலாற்றிலும், சர்வதேச தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக…
-

டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி
அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…