Category: உலக செய்திகள்
-
ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு ரஷ்யா கடும் கண்டனம்
ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ராணுவப் பயிற்சியில் அமெரிக்காவின் ‘டைபன்’ (Typhon) ஏவுகணை அமைப்பு பயன்படுத்தப்படுவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஜப்பானில் வரும் செப்டம்பர் 8 முதல் 24 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,700 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். இது இதுவரையிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சியாகும்.…
-
ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் போலந்து நாடு இறங்கியுள்ளது
ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போலந்து நாடு, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைன் போர் மற்றும் பாதுகாப்பு தேவைகள் காரணமாக, போலந்து நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் பொருள் கொள்முதல் 2022-க்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 30.4 பில்லியன் ஸ்லாட்டுகளாக ($8.15 பில்லியன்) உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் போலந்து தனது பாதுகாப்புச் செலவினங்களுக்காக சுமார் €53 பில்லியன் ($61.45 பில்லியன்)…
-
ஜூன் மாத இடைக்கால ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அதற்கு தாங்களும் உடன்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அமெரிக்கப் படைகள் ஈரானின் லாராக் தீவு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்வெளி தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜூன் மாத ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றினால், இஸ்லாமிய குடியரசான ஈரானும் அதற்கு உடனடியாக ஒத்துழைக்கும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian)…
-
காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு சாதாரண இயற்கைப் பேரிடர் அல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், பருவநிலை மாற்றத்தால் இவ்வாறான அனர்த்தங்களின் அபாயம் அதிகரித்து வருவதால் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பனிச்சரிவுக்கான சரியான…
-
ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நேற்று (31) நள்ளிரவு முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும்…
-
பென்டகனில் தொடரும் சர்ச்சை – இராணுவ செயலாளர் பதவி விலகல்
அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார். இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடிய பின்னரே டிரிஸ்கோல் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டிரிஸ்கோலுக்கும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் இடையில், இராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள்…
-
பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான இந்து கோயில் இடிப்பு.. மதரஸாவுக்காக இடிக்கப்பட்டதாக சர்ச்சை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இருந்த இடத்தை அருகில் செயல்படும் மதரஸாவுக்கு பயன்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இடித்ததாக அங்குள்ள இந்து சிறுபான்மை அமைப்புகளும், உள்ளூர் மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், கனமழையால் கோயில் இடிந்து விழுந்ததாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்து மக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இருப்பினும், அங்கு இந்து மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும், இந்து சொத்துகள், கோயில்கள்…
-
கண்டுகொள்ளாமல் நழுவிய புடின்
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ குழுக் புகைப்பட நிகழ்வு முடிந்த பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைப் பின்தொடர்ந்து சென்று, அவரது கையைப் பிடித்து நிறுத்திப் பேசியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப். இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிஷ்கெக்கில்…
-
பாகிஸ்தானில் சத்தமின்றி ராணுவ ஆட்சி? மக்களாட்சி காலி
பாகிஸ்தானில் கடந்த காலத்தில் பல முறை ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்த முறை நேரடியாக மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் கூட ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீரிடம் மெல்ல அதிகாரம் குவிந்து வருகிறது. இதனால் அங்கு மறைமுகமாக ஒரு ராணுவ ஆட்சி உருவாகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அந்நாட்டின் ராணுவ அதிகாரத்தை மேலும் ஒரே மையத்தில் குவித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் ஃபீல்டு மார்ஷல்…
-
மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்!
இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை உருகி நோபளத்தின் கோஷி ஆற்றில் பாய்ந்ததால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை டிரோன் கேமராக்களை கொண்டும், மீட்பு படையினர் மூலமாகவும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படியான சூழலில், இந்த விபத்து குறித்து மிகப்பெரிய…