Category: உலக செய்திகள்
-
தென் கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்று கைது!
தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உத்திசார் கூட்டணி
அமெரிக்காவுடன் நிலவி வரும் கடுமையான வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன்…
-
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு – ட்ரம்ப்பின் அழைப்பு நிராகரிப்பு
ஈரானுடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைப்பாட்டில் ஈரான் இல்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் தள பதிவில், அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான கருத்துக்களால் யாரும் திசைதிரும்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ்…
-
எல் நினோ தாக்கம் – பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து மேலும் குறைப்பு
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ள பனாமா கால்வாய் கப்பல் போக்குவரத்தை மேலும் குறைக்க பனாமா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமடைவதால் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக மத்திய அமெரிக்காவில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பனாமா கால்வாயின் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் சுமார் 5 சதவீதம் பனாமா கால்வாய் வழியாக நடைபெறுகிறது. கால்வாயில்…
-
பாலில் ரப்பர் ரசாயனங்கள்: சுவிஸ் ஆய்வு முடிவுகள்
சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு…
-
புடினுக்கு வந்த பேரதிர்ச்சி.. உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!
ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் 51-ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் (51st Combined Arms Army) தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் செர்கெய் மில்சகோவ் (Sergei Milchakov) உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் கட்டளை மையங்களைக் குறிவைத்து உக்ரைன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில்தான் மில்சகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 27-ஆம் தேதி உக்ரைன்…
-
ட்ரம்ப் கிளப்பிய பிரிவினைப் பேச்சு ஐக்கிய ராஜ்ஜியத்தின் மையப் பொருளாகியிருக்கிறது
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வடக்கு அயர்லாந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது பிரிட்டன் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் இங்கிலாந்து, பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இங்கிலாந்து என்பது கிரேட் பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றின் பகுதியாக உள்ள நாடு. பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. ஐக்கிய ராஜ்ஜியம் அதாவது யூ.கே. என்பது…
-
கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!
பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிp படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பான விவாதங்களும் தொடங்கியுள்ளன. சீனாவின் ‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், 7 நீர்மூழ்கிச் சோதனைகள் மூலம் பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிப் படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள்…
-
முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்
இஸ்ரேலில் பிரதமர்கள் வெறும் ஒப்பனைக்காக மட்டும் செய்த செலவு, கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது, அவ்வூர் மக்களை மட்டுமல்ல, உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் முடி அலங்காரம், ஒப்பனை மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்காகச் சுமார் 470,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.49 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அணு ஆயுதம் தொடர்பாக, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கெனவே இஸ்ரேல் படைகள், காஸாவை நிர்மூலமாக்கிய நிலையில்,…
-
திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 14 அன்று இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, இணைய வர்த்தக உலகில் முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் AI உந்துதல் தீர்வுகளை நோக்கி நகர்வதிலும் ஒவ்வொரு…