Category: உலக செய்திகள்
-
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
ஜப்பான் மத்திய வங்கி, தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 1.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, ஜப்பானில் கடன் பெறுவதற்கான செலவு கடந்த 31 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் பணவீக்கம், ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஏற்படும் பொருளாதார அழுத்தம் உள்ளிட்ட காரணிகள் வட்டி விகித உயர்வுக்கான பின்னணியாகக் குறிப்பிடப்படுகின்றன. ஜப்பான் மத்திய வங்கி இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம்…
-
அமெரிக்கா – ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
ஈரானுடன் நிலவிவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மீண்டும் ஒரு தீவிரமான தாக்குதல் தொடரை ஆரம்பிப்பது தொடர்பில் தான் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “எனக்கு விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. நான் உள்ளே நுழைந்து அவர்களை முழுமையாக அழிக்க வேண்டுமா இல்லையா? அது மிகப் பெரிய ஒரு முடிவு. என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.…
-
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.…
-
அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா
அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது. முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117…
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக…
-
பங்களாதேஷில் தட்டம்மை பரவல் – 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டம்மை நோய்த் தொற்றால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவசர தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளாந்தம் சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைச் சென்றடையும் வகையில், தடுப்பூசி திட்டத்தின் தீவிர கட்டத்தை செப்டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்க பங்களாதேஷ்…
-
மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி – சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் உறுதி
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு…
-
பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று: தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி…
-
இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறும் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள்
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்த இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறுகின்றனர். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. பள்ளியின் தரமோ அங்குப் பிள்ளைகள் நடத்தப்பட்ட விதமோ முடிவுக்குக் காரணம் இல்லை என்று குறிப்பிட்டப்பட்டது. வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம், அந்த வட்டாரத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலை எழுந்துள்ளது. இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் தம்பதியின் பேச்சாளர்…
-
ஈரான், அமைதி உடன்பாட்டிற்கேற்ப செயல்படவேண்டும்: சீனா
ஈரான் சென்ற ஜுன் மாதம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி உடன்பாட்டின் விதிகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சியிடம் (Abbas Aragchi) அவ்வாறு கூறியுள்ளார். ஈரானும் அமெரிக்காவும் அமைதி காத்து, அரசதந்திரப் பேச்சுகளைத் தொடரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, எல்லாத் தரப்பும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு வாங் யீ வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த…