Category: உலக செய்திகள்

  • ஈரானின் “CODE 100” எச்சரிக்கை? அமெரிக்கா, இஸ்ரேலுக்கு திடீர் அலர்ட்! என்ன நடந்தது?

    ட்ரம்பின் பயணம் திடீரென குறைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட வான்வெளியில் நுழைந்த பொதுவிமானத்தை NORAD F-16 இடைமறித்ததும் அமெரிக்க பாதுகாப்பு கவலைகளை தூண்டியுள்ளன. இதே நேரத்தில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனுடன், ஈரான் ராணுவம் Code 100 என்ற உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. மத்திய கிழக்கில் ஏற்கெனவே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் Camp David பயணம் முன்கூட்டியே…

  • விண்வெளியிலும் குப்பை பிரச்சினை: பூமியின் சுற்றுப்பாதையை சுத்தம் செய்யும் முயற்சியில் உலக நாடுகள்!

    பூமிக்கு மேலே நம்மால் பார்க்க முடியாத ஒரு மிகப்பெரிய பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது! அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகள் என எச்சரிக்கப்படுகிறது. செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள், சிறிய உலோகத் துண்டுகள், பெயிண்ட் துகள்கள் என பூமியைச் சுற்றி ஏராளமான பொருட்கள் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களுக்கே மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்தக் குப்பைகளை எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. Low Earth Orbit…

  • பாகிஸ்தானுக்கு ஹவுதி பகிரங்க எச்சரிக்கை.. ஆபத்தில் மெக்கா ஒப்பந்தம்?

    கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால் வளைகுடா பகுதியில் தொடங்கிய போர், சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இடையேயான தீவிர மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இது ’மெக்கா ஒப்பந்தம்’ (Mecca Pact) எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல்…

  • சவுதி தாக்குதலுக்குப் பின் சொந்த மக்களுக்கு US எச்சரிக்கை!

    ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுதிக்கள் – சவுதி அரேபியா இடையே நடந்துவரும் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சவுதியின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு அருகில் கூட அண்மையில் ஹவுதி படை தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.…

  • AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த ‘AI FORCE’ அமைப்பு உருவாக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!

    செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக ‘AI CZAR’ எனப்படும் சிறப்புப் பொறுப்பாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் வரை AI துறை பங்களிக்கக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தடுக்கும் நோக்கில்…

  • ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடமாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறித்த கடல் வழித்தடத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ்…

  • போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு நிபந்தனைகள்

    அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்பதற்கு ஈரான் நிபந்தனைகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei), கட்டார் மத்தியஸ்தர்கள் ஊடாக இந்நிபந்தனைகள் வெள்ளை மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை தடைகளை நீக்குதல் ஆகியன இந்நிபந்தனைகளில் அடங்குகின்றன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும்…

  • கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

    கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது கருத்துகளுக்குப் பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த நிரந்தரக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் தயாராகிவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (18)…

  • ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன குழுவுக்கு அனுமதி வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

    நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன அதிகார அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு உறுப்பினர்களின் மீதான விசா தடைகளை நீட்டிப்பதாகக் கடந்த 16ஆம் திகதி அன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பாலஸ்தீன குழுவினரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.…

  • நியூயோர்க்கில் 10 நிமிட கெடுவுடன் கூடிய அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் அறிமுகம்!

    அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் எளிதாகக் கண்டறியும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உள்ளே சென்றதும் ‘கவுண்ட் டவுன்’ நேரக் கணிப்பு…