Category: உலக செய்திகள்

  • ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு

    மூன்று அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக CNN, Politico மற்றும் MS NOW ஆகியன தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தடையை அறிவித்திருந்தார். குறித்த நிறுவனங்கள் தனது குழுவைப் பற்றி “கட்டுக்கதைகள் அல்லது போலியான தகவல்களை” எழுதுவதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சனிக்கிழமை தங்கள் நிருபர்களுக்கு வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.…

  • சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி, போராட்டமொன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (20) இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான்கானை விடுவிக்குமாறு அலீமா கான் தொடர்ந்து போராடி வருவதோடு, பல தரப்புகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இம்ரான்கானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் பொது ஒழுங்கு…

  • மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்… 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்!

    இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான ஒருவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் சிகிச்சை இன்றி 271 நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல… 271 நாட்கள் கழித்து, தற்போது வெற்றிகரமாக மனித உறுப்பை பெற்றுவிட்டார் அவர். மனித உறுப்பு கிடைக்கும் வரை, தற்காலிகமாகவே அவர் இந்த பன்றி உறுப்பை பெற்றிருந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மனித உறுப்பு தானமாக கிடைக்கும்…

  • ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: விளாடிமிர் புதின் கட்சி அமோக வெற்றி…

    ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ கட்சி 355 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தாலும், யாரும் கணிக்க முடியாத அளவுக்கு ரஷ்ய அரசியலில் புதினின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையான ‘ஸ்டேட் டுமா’ (State Duma) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. உக்ரைன் போருக்குப் பிந்தைய…

  • படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

    பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று சிங்கப்பூர் நீரிணையில் மீன்பிடிப் படகொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக் கப்பல் மோதியதில் மீன்பிடிப் படகிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • ஜப்பானை உலுக்குகிறது துஜுவான்’ புயல் – 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

    ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களை ‘துஜுவான்’ (Dujuan) எனப்படும் பேரழிவுச் சூறாவளி தாக்கி வருவதால், வரலாறு காணாத பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புயலின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, 6 மாகாணங்களைச் சேர்ந்த 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 50,000க்கும் அதிகமான வீடுகள் மின்சார வசதியை இழந்துள்ளன. கனகாவா மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண்…

  • இரட்டைத் தலைகளுடன் பொரித்த அரிய ஆமைக்குஞ்சு

    அமெரிக்காவின் கேப் கோட் பகுதியில் அமைந்துள்ள சரணாலயத்தில் இரட்டைத் தலைகளுடன் கூடிய ஆமைக்குஞ்சு ஒன்று பொரித்துள்ளது. இரட்டையர்களாக உருவாக வேண்டிய கரு முழுமையாகப் பிரியாமல், ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் உருவாகும் அரிய நிலை ‘Bicephaly’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய உடலமைப்பு மிகவும் அரிதாகவே காணப்படும் நிலையில், கேப் கோட் சரணாலயத்தில் பொறித்துள்ள இந்த ஆமைக்குஞ்சு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கத்திற்கு மாறான உடலமைப்புடன் காணப்படும் இந்த ஆமைக்குஞ்சை சரணாலயப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத்…

  • இத்தாலி பாடசாலைகளில் பர்தா, நிகாப் அணிய தடை?

    வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் பாடசாலைகளில் பர்தா மற்றும் நிகாப் ஆகியவற்றை அணிவதை தடை செய்வது தொடர்பான நடவடிக்கையை விரைவில் தனது அரசாங்கத்தால் அறிமுகம் செய்யவுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜிர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். “பாடசாலை அமைப்பில் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும்” வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இத்தாலிய மொழி பாடங்களை கட்டாயமாக்கும் அம்சமும் இந்த நடவடிக்கையில் அடங்கும் என்று, தனது தேசியவாத-பழமைவாத கட்சியான ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’யின் (Brothers of Italy) இளைஞர் அணியினரிடம்…

  • சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம்!

    சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, சீனா–அமெரிக்கா உறவுகள் மற்றும் உலக அமைதி, அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்புடன் ஷி ஜின்பிங் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வழக்கமான செய்தியாளர்…

  • அமெரிக்க MQ-1 ட்ரோனை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

    ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்காவின் MQ-1 ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா MQ-1 ட்ரோன்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கியிருந்தாலும், மிகவும் மேம்பட்ட MQ-9 ரக ட்ரோன்களைப் பெருமளவில் இழந்ததைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக IRGC கூறியது. இந்த இரண்டு ரக ட்ரோன்களும் IRGC-யின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பால் தீவிரமாக வேட்டையாடப்பட்டு…