Category: இலங்கை செய்திகள்

  • ரயிலில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து!

    ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவலை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

    இலங்கை: தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • பிலியந்தலயில் துப்பாக்கிச்சூடு!

    பிலியந்தல, போகுந்தர பகுதியில் இன்று (19 ஜூலை 2026) காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் புகுந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு பிலியந்தலை நோக்கி தப்பியுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பி ஓடுவது குறித்த தகவல் கிடைத்ததும்,…

  • போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்

    பிலியந்தலை – போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கையின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  • செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!

    யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை 423 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று, யாழ்ப்பாணம் செம்மணியின் மிகப்பெரிய என்புக்கூட்டுப் புதைகுழியை எதிர்வரும் புதன்கிழமை அன்று பார்வையிடவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தூதுக்குழுவில், இத்தாலியத் தூதர் டாமியானோ…

  • டெங்கு பாதிப்பு: பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

    டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

  • கடற்பரப்புகள் கொந்தளிப்பு – விசேட எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

    இலங்கையில்,ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த…

  • யாழ்ப்பாணம் செம்மணியில் தொடரும் அகழ்வு

    யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆவது நாளான இன்று, மேலும் 6 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. இதில் சிறார் ஒருவரின் என்புக்கூடும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் 56 நாட்கள் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 36 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்றைய தின நிலவரப்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…

  • ரூ. 4 கோடி கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டுப் பெண் கைது!

    ரூபாய் 4 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி, சக்கர நாற்காலியின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஆசிரியை ஒருவர் நேற்று (17) சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் ஒரு எச்.ஐ.வி (HIV) தொற்றாளர் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள இந்தச் சந்தேக நபர், அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியா மற்றும் கட்டார் ஊடாக இலங்கை வந்துள்ளார். சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியிருந்த…

  • டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

    வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரட்டபெரியகுளம் வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரட்டபெரியகுளம் வீதியின் 16ஆம் கட்டை பகுதிக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பணி நிமித்தமான கடமைகளை முடித்துக்கொண்டு வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட், டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…