Category: இலங்கை செய்திகள்

  • மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி ‘கொஸ் மல்லி’யின் பிரதான பாதாள உலக துப்பாக்கிதாரி ‘ஷெரஃப்தீன்’ என அடையாளம்

    மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி, பாதாள உலகக் குழுவின் முக்கிய நபரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் பிரதான ஒப்பந்த துப்பாக்கிதாரி  என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த கைதி ஹோமாகம, ரத்தொளுகம – கட்டுவன வீதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மான் ஷெரஃப்தீன் எனப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு எல்லை மீறிச் சென்றதாலேயே இம்மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த…

  • ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபராக தரமுயர்த்தப்பட்டுள்ளார். இந்தத் தரமுயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தரமுயர்வு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்த்த தேசிய காவல்துறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் அபேசேகர, தனது சேவைக் காலத்தில்…

  • இலங்கை:வத்தளை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் கைது

    வத்தளை, கதிரான பகுதியில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கித்தாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்து…

  • இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

    இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கம்பம் ஜெயராஜ்க்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார். இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு…

  • செம்மணியில் புதிதாக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியிலிருந்தும் மனித எச்சங்கள் மீட்பு

    செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியானது அனைத்து மூன்று கட்டங்களிலுமாக 100 நாட்கள் களப்பணியை எட்டியுள்ளது. முதலாம் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், தொடர்ந்து நடைபெற்றுவரும் மூன்றாம் கட்டம் 46 நாட்களையும் பூர்த்தி செய்துள்ளன, இதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை 100 நாட்களாகியுள்ளது. இன்றைய மூன்றாம் கட்டத்தின் 46 வது நாளில், மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனடிப்படையில், மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின்…

  • லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு

    2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி அழைப்பின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு காணொளி அழைப்பின் ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு

    கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  • குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் உயிரிழப்பு

    குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட காவல்துறை அதிரடிப்படையினரும், கலகத்தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  • இலங்கையில் தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

  • நல்லூரான் வடக்கு வாசல் வளைவு திறந்து வைக்கப்பட்டது

    அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான நல்லூரான் வடக்கு வாசல் வளைவு திறந்து வைக்கப்பட்டது. ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று.(06.08.2026) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது. காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில்…