Category: இந்திய செய்திகள்

  • பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்

    பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.. தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார். 2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. மத்திய அரசின் 4-வது உயரிய விருதான…

  • இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்

    நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு…

  • அஜித்தின் பிரித்தானிய கார் பந்தயத்தை ஆரம்பித்துவைக்கும் விஜய்!

    தமிழக முதலமைச்சர் விஜய் பிரித்தானியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட விஜய் டுபாய் சென்று அங்கிருந்து லண்டன் பயணிக்கிறார். நேற்று (10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி நாடு திரும்பவுள்ளது. அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர்…

  • காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, காப்புரிமை தொடர்பான உத்தரவை மீறி தனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடல்களின் காப்புரிமையை நிர்வகித்து வரும் சரிகம நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், காப்புரிமை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.…

  • இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!

    இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (10) நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து அவர் இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

  • “இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

    மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதில் தனது தாடை என்பு உடைந்ததாகவும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்தச்…

  • சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!

    நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, தாங்கள் பிரிவதாக ரவி மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனையடுத்து, இருவரையும் மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்…

  • ”Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு” – நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

    நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர், நிதின் கட்கரி. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு…

  • முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை.. கங்கனா ரனாவத் கேட்ட கேள்வி?

    பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை கீழே இறக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் பேசிய விஜய், பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார். இந்தச்சூழலில் தான்,…

  • தமிழக முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுகள்…