Category: இந்திய செய்திகள்
-
வெளியே வந்தால் உடல் எரியும் – மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்
இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக். இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.…
-
இந்தியா – பாகிஸ்தான் பொருளாதாரம் 25 பைசாவும் 500 ரூபாயும் மாதிரி: ‘ஆபரேசன் சிந்தூர்’ புத்தகத்தை வெளியிட்ட அண்ணாமலை பேச்சு
கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் சுதேசி மேளா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேசன் சிந்தூர்’ (Operation Sindoor) புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: ”நாட்டுக்காக நமது இராணுவ வீரர்கள் எந்த அளவுக்கு தியாகங்களுடன் போராடுகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்க…
-
கன்னட திரையுலக ரேணுகாசுவாமி மரண வழக்கில் பெரும் திருப்பம்!
கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசுவாமி மரண வழக்கில், 14-வது குற்றவாளியான பிரதோஷ் நீதிமன்றத்தில் மன்னிப்பு சாட்சியாக மாறுவதற்கும் சட்டப்பூர்வ மன்னிப்பு கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான பிரபல நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதோஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் ரேணுகாசுவாமிக்கு நேர்ந்த கொடூரங்கள் மற்றும் மரணத்தை மறைக்க நடந்த சதித் திட்டங்கள் குறித்த புதிய…
-
பெயரால் வெறுப்பான பாக். வீரர்.. வாய்விட்டுச் சிரித்த பிரதமர் மோடி
2026 காமன்வெல்த் போட்டியில் (Glasgow CWG 2026) ஆடவர் +90 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால் (Narender Berwal), சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவரைச் சிரிக்கவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று 4ஆவது இடத்தைப் பிடித்தது. இதில், குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 10…
-
ஜாமீன் பெற நீதிபதி படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகம்.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!
சத்தீஸ்கரில் உறவினருக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாஸ்பூர் அருகே தேவ்ரி கிராம சுடுகாட்டில் நள்ளிரவில் சிலர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதை அறிந்த கிராமத்தினர் அவர்களிடம் விசாரித்தபோது தப்பி ஓடினர். பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட தனது உறவினருக்கு ஜாமீன் பெற மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார். சுடுகாட்டில் எலுமிச்சம்பழம், குங்குமம் மற்றும்…
-
ஒரே வாரத்தில் 100 கோடி பார்வைகள்.. சாதனை படைத்த ’ராமாயணா’ ட்ரெய்லர்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. இந்த நிலையில்,…
-
நாட்டாமை குடும்பம்” பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
“நாட்டாமை குடும்பம்” (Nattamai family) என்று பச்சை (Tattoo) குத்திக் கொண்டால், அதைத் தன்னை நேரடியாகச் சந்திப்பதற்கான ‘கிரீன் கார்ட்’ ஆகப் பயன்படுத்தலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், தனக்கும் இந்தப் பச்சையைக் குத்திக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான நிழற்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
-
திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில், திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்திருந்த இந்திய மதிப்பில் ரூ.5 இலட்சம் பணத்தை கறையான்கள் அரித்துச் சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.5 இலட்சம் பணத்தை, திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பொலித்தீன் பையில் வைத்து நிலத்தில் புதைத்துள்ளார். எனினும், காலப்போக்கில் பணத்தைப் புதைத்து வைத்திருந்த சரியான இடத்தை அவர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் அந்த நிலத்தை உழுதபோது, புதைத்து…
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏ.ஆர்.அமீன், தனது நண்பருடன் சிற்றூந்தில் பயணித்தபோது, எதிரே வந்த மற்றொரு சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் அனைவரும் சிறிய காயங்களுடன் தப்பியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தவிபத்து குறித்து மாநிலப் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், செல்போன் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களிடம் பழகி, ரூ.6 கோடிக்கும் மேல் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் பல்லவி சிங், அவர்களுக்குத் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவார். பின்னர் நேரில் சந்தித்து அந்தரங்கமாகப் படங்கள் எடுத்து, அவற்றைக் காட்டி மிரட்டி பணம் பறித்து…