Category: இந்திய செய்திகள்

  • பயிற்சியாளராகக் களமிறங்கும் யுவராஜ் சிங்!

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், வரவிருக்கும் 2027 ஐபிஎல் (IPL) சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வமாகப் பயிற்சியாளர் களத்தில் அவர் முதன்முறையாகத் தடம் பதிப்பதுடன், இந்திய மதிப்பில் ஆண்டிற்குச் சுமார் 6 கோடி ரூபாவுக்கு மேல் சம்பளமாகப் பெறவுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரிலேயே அதிக சம்பளம் வாங்கும் இந்தியப் பயிற்சியாளர்களில் ஒருவராகவும், ஒட்டுமொத்தப் பயிற்சியாளர்கள் பட்டியலில் 4…

  • தாத்தா கொலையில் காதலனுடன் சிக்கிய 13 வயது பேத்தி

    கேரளத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் காதலன் மற்றும் இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்புழாவில் 65 வயது முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது உடல் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்,…

  • மகாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி ஏலம்.. படைத்தது உலக சாதனை

    மகாத்மா காந்தி தனது நெருங்கிய தோழரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு, சாஃப்ரனாட் ஏல நிறுவனத்தின் மூலம் ரூ.16.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இதுவரை ஏலம் போனதில் இதுவே உலக சாதனையாகும். உண்மை, அகிம்சை, சேவை, பிரம்மச்சரியம் மற்றும் ஒழுக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் காந்தியடிகள் எழுதிய தினசரி குறிப்புகள் இதில் அடங்கும். ஹிகோரணியின் மனைவி வித்யாவின் மறைவுக்குப் பிறகு,…

  • ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு .

    எல் நினோ விளைவு காரணமாக உலகம் முழுவதும் இந்த ஆண்டு இயல்பை விட வானிலையில் தீவிரமான மாற்றம் இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர புயல்களும், பெருவெள்ளங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் வடமாநிலங்களின் சில முக்கிய இடங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் அதீத மழைபொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அந்த வரிசையில் ஜம்மு…

  • அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ‘சந்து டிரேடிங் கம்பனி’ எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீகாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும்…

  • பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

    தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300 க்கும் மேற்பட்ட…

  • உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

    சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு வருகை தந்த அவரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விஜய் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். இந்த மாநாட்டிற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உயர்நிலைக்…

  • திமுகவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

    தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா – கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.…

  • கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்! – சாய் அபயங்கர்

    சினிமா இசை மற்றும் இன்டி இசை இரண்டிலும் அசத்தி வருபவர் சாய் அபயங்கர். அடுத்தாக தனுஷ் நடிக்கும் ஓம், அல்லு அர்ஜுனின் `ராக்கா’, கார்த்தியின் மார்ஷல், சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு உரையாடலின் போது யாருடைய படத்தில் பணியாற்ற ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சாய் “2024ல் என் முதல் பாடல் வெளியான போது நான் இதனை நினைத்துக் கூட…

  • மோகன்லால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்.. சபரிமலையில் படம்பிடிக்கத் தடை!

    மோகன்லாலில் 366வது திரைப்படமாக உருவாகிவரும் படம் ‘அதிமனோஹரம்’. இப்படத்தை ரதீஷ் ரவி எழுதி, தருண் மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால் சப் இன்ஸ்பெக்டர் டிஎஸ் லவ்லாஜனாக நடிக்கிறார், மீரா ஜாஸ்மின் நைசியாக நடித்துள்ளார். இதன் திரையரங்கு வெளியீட்டை 2026 டிசம்பர் 24 அன்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தசூழலில் இப்படத்திற்காக பம்பா மற்றும் நிலக்கலில் படப்பிடிப்பு நடத்துவதற்குத் தயாரிப்பு நிறுவனம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அந்தக்…