Author: Six Side Media

  • ஜோ ரூட்: டெஸ்ட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை!

    பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்,(Joe Root) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் (Half-centuries) அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி…

  • விராட் கோலியின் டாட்டூக்களின் பின்னணியில் இருக்கும் அர்த்தங்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் உடலில் காணப்படும் டாட்டூக்கள் (பச்சை குத்தல்), அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் கிரிக்கெட் பயணத்தின் முக்கிய தருணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள விராட் கோலி, இந்திய விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். அவரது ஆரம்பகால டாட்டூக்களில் ஒன்றாக வலது முன்கையில் வரையப்பட்ட பழங்குடியின கலை வடிவிலான டாட்டூ காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஸ்டைலுக்காக வரையப்பட்டதாகக் கூறப்பட்டாலும்,…

  • இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு

    இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கே.எம். பார்சிலோனா 5  கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் 280 பயணிகள் இருந்தனர், மேலும் தீயில் இருந்து தப்பிக்க அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா.. ஓரங்கட்டப்படும் டாலர்?

    உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு மாற்றாக புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க BRICS முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் நாணயங்களில் நிதியுதவி வழங்குவதை அதிகரிக்க New Development Bank என்று சொல்லப்படும் NDB-யை BRICS தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…

  • ஈரானுக்கு உதவி செய்த சீனா? உலகையே உலுக்கும் புதிய தகவல்!

    ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதலில் சீன நிறுவனங்கள் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக ஈரானுக்கு மறைமுகமாக உதவியுள்ளன என்பது பல்வேறு சர்வதேச ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) தயாரிப்பதற்குத் தேவையான செமிகண்டக்டர்கள், சென்சார்கள் போன்ற இரட்டைப் பயன்பாட்டு (Dual-use) தொழில்நுட்பக் கூறுகளை சீன நிறுவனங்கள் வழங்கியிருந்தது. மேலும் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகள் (MANPADS) போன்ற ஆயுதங்களை ஈரான் வாங்குவதற்கு சீனாவைச் சேர்ந்த தரகர்கள் உதவியதாகக் கண்டறியப்பட்டிருந்தது. இதனால்…

  • ஆயுதங்கள் காலி.. நெருக்கடியில் ட்ரம்ப்!

    ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் இருந்து வரும் தகவல்கள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் நேரடியாக போரின் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமான பென்டகன் அறிக்கைகளை மட்டுமே நம்பாமல், களத்தில் இருக்கும்…

  • அடுத்தடுத்து வெடித்து சிதறும் NATO ஆயுதக் கிடங்குகள்! அச்சத்தில் ஐரோப்பா

    NATO கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்கேரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ மற்றும் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் காட்சிகள், இரவு வானமே தீப்பிழம்புகளால் ஒளிரும் அளவுக்கு பதற்றமாக இருந்துள்ளது பல்கேரியாவின் மத்திய பகுதியில் உள்ள Tarva Levada கிராமம் அருகே இந்த ஆயுத சேமிப்பு தளத்தில் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ ஒரு கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்குக்கு பரவியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டபோதிலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது…

  • கார்த்தியை ஓரங்கட்டிய சூரி.. 2 மடங்கு அதிக வசூல்!

    கடந்த 10ஆம் தேதி கார்த்தியின் ‘சர்தார் 2’ மற்றும் சூரியின் ‘மண்டாடி’ திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளிவந்தன. கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்பை-த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி ஹிட்டடித்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது சர்தார் 2 திரைப்படம்.. இதில் கார்த்தி உடன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் இணைந்ததால் படம் மீதான ஹைப் இரட்டிப்பாகியது. அதேபோல காமெடியனாக இருந்து தன்னுடைய ஸ்க்ரிப்ட் தேர்வின் மூலம் ஹீரோவாக சர்ப்ரைஸ் கொடுத்துவரும் சூரி,…

  • கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை!

    இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித – யானை மோதல்கள் அடிக்கடி நடைபெறும் கோலகாட் மாவட்டத்தின் மொரோங்கி வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த யானை நடமாடியுள்ளது. தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடியவாறு இந்த யானை உலா வந்த நிலையில், அதன் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்டிருக்கும் நிழற்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது…

  • டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அயர்லாந்து வருகையையொட்டி, அந்த நாட்டு வரலாற்றிலேயே மிகப்பாரிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் டப்ளின் மற்றும் கிளேர் பகுதிகளில் காவல் துறையினர் 10,000-க்கும் மேற்பட்ட 12 மணி நேர பணிச் சுழற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்துக்காக, சிறப்புப் பணி ஒதுக்கீடுகள், மேலதிக நேர வேலைகள் மற்றும் பிற மாவட்ட காவல் படையினரை இங்கு வரவழைக்கும் வகையில் ‘சிறப்பு…