Author: Six Side Media
-

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-

ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்
ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து…
-

சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும்…
-

நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு
தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்காக நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்து வைத்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (29) மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது, நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற…
-

ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக வைத்தியர் தமரா கலுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தலைவராக நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை வைத்தியர் தமரா கலுபோவிலவிடம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வழங்கி வைத்தார்.
-

வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக்…
-

கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்
கண்டி, கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கம்பளை வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று(28) மாலை குறித்த தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடிய நிலையில் குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-

ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு
பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவுதான் ரயில் விபத்திற்குக் காரணம் என்று ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பிபெராச் நகரில் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர் முதற்கட்ட விசாரணையில், ரயில் தடம் புரண்டு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்து மண்மேட்டில் மோதியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிறுவன ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்,…
-

சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 6.6 அதிர்வலை பதியப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் இதுவரை எச்சரிக்கைகள் ஏதும் விடப்படவில்லை.
-

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று(28)காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு…