Author: Six Side Media
-
பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) முற்பகல் திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு இவ்வாறு மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என…
-
போர் பிராந்தியம் முழுவதும் பரவும், அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் முழுப் பிராந்தியத்துக்கும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் இதில் சிக்கிக்கொள்ளும் என்று ஈரானின் முதன்மை அமைதிப் பேச்சாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹம்மட் பாகர் காலிபஃப் எச்சரித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் எண்ணெய் விற்காத பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. எங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்தக் கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது, மேலும் நீரிணையின் பாதுகாப்பு என்பது அமெரிக்கப் படைகள் இல்லாத நிலையிலேயே சாத்தியமாகும்’…
-
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! – ரொய்ட்டர்ஸ்
CIA எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள வளாகங்கள் மீது ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில், இலக்கு நிர்ணயம் செய்வதற்கான தரவுகள் அல்லது மேம்பட்ட தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விபரம் அறிந்த நான்கு நபர்களை மேற்கோள்கொண்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில்…
-
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று – நாமல் ராஜபக்ச
எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார். அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய…
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு – இந்தியப் பிரதமர் மோடி
நீட் (Neet) வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என வலியுறுத்திய அவர், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பிரதமர் மோடி, இளைஞர்களின்…
-
அனுமான் சிலையை காட்டி கோடிகளை சுருட்ட முயன்ற கும்பல் கைது
அனுமான் சிலையை காட்டி ரூ. 2,500 கோடி மோசடி செய்ய முயன்ற கும்பலின் பிரதான சந்தேகநபர் கொழும்பு பகுதியில் வைத்துப் பணத்தைப் பறிக்க முயன்றபோது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபடப்பட்டு, பின்னர் 2016-ல் ஜா-எல – மெல்வத்த பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு இரகசியமாகப் புதைக்கப்பட்ட ‘தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை’ என இந்தக் கும்பல் முகப்புத்தகம் மூலம் பொய்ப் பிரசாரம் செய்துள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை,…
-
தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர் ஒருவரை சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ,அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான , தேசபந்து தென்னகோன் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. 2022 போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்பவர், தனக்கு நடந்த சட்டவிரோத…
-
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
அரிக்காவும், சவூதி அரேபியாவும் அமைதியான குடிமக்கள் பயன்பாட்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி…
-
சிறார்கள்,பிரான்சில் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
றார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறவுள்ளது. சிறுவர்களை இணையவழி ஆபத்துகள் மற்றும் மனநலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. இந்தத் தடை இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வருகிறது :வரவிருக்கும் செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புதிய சமூக ஊடகக்…
-
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,100 ஐக் கடந்தது!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், நேற்று (21) வரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆகப் உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்: கம்பஹா மாவட்டம்: 16,478 நோயாளர்கள் கொழும்பு மாவட்டம்: 15,540 நோயாளர்கள் மாதாந்த அதிகரிப்பு: ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதம் (இதுவரை): 22,749 பேர் ஜூன் மாதம்: 21,535 பேர் அதி தீவிரமாக டெங்கு…