ஐ.நா பொதுச்சபையில் இந்தியாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய ரஷ்யா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்(UNSC) பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது என நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

இதனூடாக இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளையில், மேற்கத்திய நாடுகளுக்குக் கூடுதல் நிரந்தர இடங்கள் ஒதுக்குவதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் என்பது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட க்ளோபல் சவுத் பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்குவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற இராணுவ மயமாக்கலை நோக்கிச் செல்லும் மேற்கத்திய நாடுகளுக்கு கூடுதல் நிரந்தர இடங்களை வழங்க முடியாது. பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது” எனக் கூறினார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *