ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டடங்கள்!

ஜப்பானின் ஹோன்ஷு கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், கரையோரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தின்போது, பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகள் உணரப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *