ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் இருப்பதாக அந்நாட்டின் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் ஹொசைன் தாயிப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில், ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து வெளியான ஒரு நாளுக்குப் பிறகு, ஈரான் தரப்பில் இருந்து இந்தப் பதிலடி வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் மற்றொரு போரைத் தொடங்குவதன் மூலம், பிராந்தியத்தில் இஸ்லாமிய குடியரசு ஈரான் பெற்றுள்ள ஆதரவை சீர்குலைக்க அமெரிக்கா முயன்றதாக தாயிப் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், ஈரானிடம் விமானப்படையும் கடற்படையும் இல்லை என்று அமெரிக்கா கூறியபோதிலும், அந்த முயற்சியிலும் அமெரிக்கா மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply