Tag: #srilankannews
-
தென்மராட்சி சந்தையில் மண்ணுடன் விற்பனை ஆகும் கரட்!
சந்தையில் கரட்டை கழுவி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் , மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மராட்சி பிரதேச சந்தையில் மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்படுவதால் , அது தொடர்பில் வியாபாரிகளிடம் கேட்ட போது , ” தம்புள்ளை சந்தையில் இருந்து வரும் கரட் மண்ணுடன் தான் வரும். அவற்றினை சந்தையில் உள்ள குழாய் நீரில் கழுவிய இதுவரை காலம் விற்பனை செய்து வந்தோம். தற்போது குழாய் நீரில் கரட் கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளமையால் ,…
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை!
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம் ,லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்
-
யாழில் கைதான போலி வைத்தியர் பல பெண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது!
வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன். வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபாய்களை பெற்று வந்துள்ளான். அத்துடன் இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்…
-
வவுனியாவில் பொலிஸ் வாகனம் விபத்து!
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கொட்டகையில்…
-
தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாக கூறி அழைத்து சென்றே படுகொலை செய்தேன்!
“தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்” என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். அதனை…
-
இந்தியாவில் இருந்து படகில் இலங்கை வந்த ஐவர் கைது!
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஐவரும் இன்றையதினம் திங்கட்கிழமை காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வந்திறங்கிய வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் எனத் தெரிய வந்துள்ளது. குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில…
-
வடமாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக போராட்டம்!
வட மாகாண அரச சாரதிகள் சங்கம் வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரச சாரதிகள் சங்கம் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்த…
-
புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி – யாழில் கைதான போலி வைத்தியர்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் , கைது செய்யப்பட்ட வேளை ,காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள் , 05 இலட்ச ரூபாய் பணம்…
-
தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல!
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள்இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்…
-
யாழில். சேமக்காலைக்கு பெண்ணை அழைத்து சென்று உயிருடன் எரித்துக்கொன்ற இளைஞன்!
சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன் , பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன் , பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட போது , இளைஞன் மறைத்து…