Category: உலக செய்திகள்
-
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அனர்த்தங்களில் 12 பேர் உயிரிழப்பு
தென்மேற்கு பருவக்காற்று , ‘குஜிரா’ மற்றும் ‘டொல்பின்’ ஆகிய சூறாவளிகளின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பாதுகாப்பு அலுவலகத்தின் உதவிச் செயலாளர் லாரன்ஸ் மீனா, இச்சம்பவங்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் ஒன்பது பிராந்தியங்கள் மற்றும் 33 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 586,000 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில பிராந்தியங்களை சேர்ந்த 4,866 பேர்…
-
கொலம்பியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் 107 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோட்டாவிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் மேற்கே, சொக்கோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மாரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ ‘ஏமாற்றிவிட்டதாக’ UEFA, AFC மற்றும் CONCACAF கண்டனம்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மற்றும் வட/மத்திய அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONCACAF ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு எதிராகக் பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளன. உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் வணிக உரிமைகளில் (commercial rights) 20 சதவீதத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு 4.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கும் திட்டத்தை இன்ஃபான்டினோ முன்னெடுத்தார். கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்ட போதிலும், அவர் நம்பிக்கையைத் துரோகம் செய்து…
-
ரஷ்ய நகரமான நிஷ்னெகாம்ஸ்க் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ஒரு குழந்தை உட்பட 13 பேர் பலி
ரஷ்யாவின் நிஷ்னெகாம்ஸ்க் (Nizhnekamsk) நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 48 பேர் காயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாடர்ஸ்தான் (Tatarstan) பிராந்தியத்தில் அமைந்த தொழில் நகரமான நிஷ்னெகாம்ஸ்க் மீது திங்கள்கிழமை காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இங்குள்ள தொழில்துறை வளாகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை (Taneco Refinery) இலக்கு வைத்து ட்ரோன்கள் வீசப்பட்டன. இதில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும்…
-
சூறாவளி ‘டால்பின்’ சீனாவைத் தாக்கியது
சூறாவளி ‘டால்பின்’ (Typhoon Dolphin) சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சூறாவளி ‘டால்பின்’ சீனாவின் கிழக்குக் கரையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஷாங்காயின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் (Hongqiao, Pudong) 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன (சுமார் 60% சேவைகள் ரத்து). மணிநேரத்திற்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன், இந்தச் சூறாவளி ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் தைஜோ (Taizhou) நகரத்தின் அருகே கரையைத் கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைஜோ பகுதியில்…
-
டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் மற்றும் வெள்ளை மாளிகை பதிவுகளிலிருந்து டெய்லர் ஸ்விஃப்ட்டின் பாடல்கள் நீக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் கணக்குகள் (@TeamTrump) மற்றும் வெள்ளை மாளிகையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பயன்படுத்தப்பட்ட பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) பாடல்கள் நீக்கப்பட்டு, அந்த வீடியோக்களின் ஒலி அமைதிப்படுத்தப்பட்டுள்ளது (Muted). ட்ரம்ப் பிரச்சாரப் பக்கத்தில் ஸ்விஃப்ட்டின் புகழ்பெற்ற பாடல்களின் வரிகளை மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட டிக்டாக் வீடியோக்களிலிருந்து பின்னணி இசை நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பயன்படுத்தப்பட்ட August, High Infidelity, Father Figure போன்ற பாடல்களின்…
-
அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம்.. ஹார்முஸை திறந்தால் போர் முடிவு! ஈரானிடம் இறங்கிவந்த ட்ரம்ப்!
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் எப்போது முடிவுக்கு வரும், உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் எப்போது முற்றுபெறும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுத்துவரும் ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியது மட்டுமில்லாமல், அமைதி ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும், ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய கிழக்கு…
-
’நான் உயிரோடு இருக்கும்வரை பாலஸ்தீனம் நாடு உருவாக விடமாட்டேன்’ – நெதன்யாகு! பின்னணி என்ன?
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். காசா முனையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த அமைதித் திட்ட ஆவணத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது…
-
எல் நினோவால் மேலும் 4.9 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம்
எல் நினோ காலநிலை மாற்றக் காரணியின் தாக்கத்தால் உலகளவில் மேலும் 4 கோடியே 90 இலட்சம் பேர் கடுமையான பட்டினி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 45 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 22 கோடியே 50 இலட்சத்தில் இருந்து 27 கோடியே 40 இலட்சமாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராகும் ட்ரம்ப்
ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப்…