Category: உலக செய்திகள்
-
சிங்கப்பூரில் அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு அரைகாற்சட்டை அனுமதி
ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உடைக்கட்டுப்பாட்டு தளர்வு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த முடிவுக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல பெண்கள்…
-
இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்காவின் 111 இலட்சம் கோடி ரூபாய் திட்டம்
சர்வதேச பதற்றங்கள் மற்றும் ஈரானுடன் தொடர்ந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபை தனது நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க 1.15 ட்ரில்லியன் டாலர் (இந்திய,இலங்கை மதிப்பில் சுமார் 111 இலட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு கொள்கை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 216-212 என்ற வாக்குகள் கணக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு தினசரி சராசரியாக 8,000 கோடி வரை செலவாவதாகவும், இதுவரை…
-
லெபனானுக்கு மீண்டும் நேரடி விமான சேவை – ட்ரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையே கடந்த 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஆட்சிக் காலத்தில், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் ‘பிளைட் 847 என்ற அமெரிக்க விமானம் கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்க அரசு, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி லெபனானுக்கான நேரடி விமான சேவையை…
-
ஐ.நா-வில் இன்று முக்கிய வாக்கெடுப்பு – ஐ.சி.சி தலைமை சட்டத்தரணி கரீம் கான் பதவி நீக்கமா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் மீதான பாலியல் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கரீம் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அத்துடன், அமெரிக்கா விதித்துள்ள…
-
சிறையில் இம்ரான் கான் உடல்நிலை மோசம்- சர்வதேச நாடுகளுக்கு மகன் உருக்கமான வேண்டுகோள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 73), சுமார் 1,100 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் நிலையில், அவரது உடல்நிலையும், கண்பார்வையும் தொடர்ந்து மிகவும் மோசமடைந்து வருவதாகத் கூறி அவரது மகனான காசிம் கான் சர்வதேச நாடுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இருப்பினும், அவரை நேரில் சென்று பார்க்கக் குடும்பத்தினருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருகின்ற அதேவேளை, பல்வேறு வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை…
-
இலங்கைப் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதித்தது அமெரிக்கா
அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டிருந்த 10% உலகளாவிய வரிக் காலம் நிறைவடையும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பொருட்களுக்கு 10% வரியையும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரியையும் விதிக்க தீர்மானித்துள்ளது. கட்டாய உழைப்புத் தடைகள் தொடர்பான சட்டங்கள் சில நாடுகளில் போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு…
-
பிரிட்டனின் அனல்காற்றால் மக்களும் பொருளாதாரமும் பாதிப்பு
பிரிட்டனில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான அனல்காற்று காரணமாக மக்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு £1.15 பில்லியன் (சுமார் 1.5 பில்லியன் டாலர்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1884 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் சந்தித்த மிக வெப்பமான ஜூன் மாதமாக இது பதிவாகியுள்ளது. சுமார் 87% தொழிலாளர்கள் தூக்கமின்மை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் அதீத சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் இந்த…
-
அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா
‘இனிமேல் இதைச் செய்யாதீர்கள்; இல்லையெனில் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என்று அமெரிக்காவுக்கு, ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? ஏன் ரஷ்யா இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 32 ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ள ராணுவக் கூட்டணியே நேட்டோ ஆகும். இந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில்தான், 2022ஆம் ஆண்டு முதல்…
-
சிங்கப்பூர் மீது அமெரிக்கா 12.5% வரி
கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க சிங்கப்பூர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 12.5 வீத புதிய வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இப்புதிய வரி விதிப்பு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பின் ‘பிரிவு 301’ விசாரணையின் முடிவாக, 2026 ஜூலை 24 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூர் நேரப்படி நண்பகல் 12:01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில்…
-
போர் பிராந்தியம் முழுவதும் பரவும், அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் முழுப் பிராந்தியத்துக்கும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் இதில் சிக்கிக்கொள்ளும் என்று ஈரானின் முதன்மை அமைதிப் பேச்சாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹம்மட் பாகர் காலிபஃப் எச்சரித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் எண்ணெய் விற்காத பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. எங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்தக் கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது, மேலும் நீரிணையின் பாதுகாப்பு என்பது அமெரிக்கப் படைகள் இல்லாத நிலையிலேயே சாத்தியமாகும்’…