பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து (Sindh) மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதம் ஏந்திய நபர், சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ”சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தானை ஆதரியுங்கள்; வெகுகாலத்திற்கு முன்பு முஹம்மது பின் காசிம் சிந்துவுக்கு வருகை தந்து ராஜா தாஹிரைத் தோற்கடித்த பிறகு ஏற்றிய அதே இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. முகமது பின் காசிம் போன்ற புதல்வர்கள் மீண்டும் சிந்து மண்ணை நோக்கித் திரும்புகிறார்கள். இஸ்லாத்திற்காக முன்னேறுங்கள். இஸ்லாத்திற்காக மடியுங்கள்” என அவர் இறுதியில் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காணொளியை, ’சிந்துவில் TTP தனது இருப்பை அறிவிக்கும் செயல்’ என விவரித்துள்ளனர்.
Leave a Reply