‘7 நாட்களில் பிராந்தியப் போரை நிறுத்தத் தயார்’ அப்பாஸ் அராக்சி அறிவிப்பு

அமெரிக்காவுடனான போர் மீண்டும் தீவிரமடைந்தால் அதை எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் வழங்கிய அமைதி முன்மொழிவை ட்ரம்ப் நிராகரித்ததாகக் கூறியபோதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்று அராக்சி கூறியுள்ளார்.

முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்கவும், மசகு எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அமெரிக்கா முன்வந்தால், 7 நாட்களில் ஹோர்முஸ் நீரிணையை திறந்து பிராந்தியப் போரை நிறுத்தத் தயார் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *